'வெங்காயம்' பிறந்த கதை

'வெங்காயம்' பிறந்த கதை
  • News18 Tamil
  • Last Updated: December 11, 2019, 11:53 AM IST
  • Share this:
வெங்காயம், பிறந்த கதையை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு...

வெங்காயம் மிக குறுகிய இடத்தில் பயிரிடப்படுவதாலும், அதன் அழுகும் தன்மையாலும், உலகில் முதன் முதலில் எந்த இடத்தில், எந்த காலத்தில், பயிரிடப்பட்டது என்பதை அகழ்வாய்வின் மூலம் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தபோதும், மத்திய ஆசியாவிலிருந்து உலகின் மற்ற பகுதிகளுக்கு வெங்காயம் பரவி இருப்பதாக நம்பப்படுகிறது.

எந்தவகையான மண்ணிலும் வளரும் தன்மை, பயிரிடுவது எளிது போன்ற காரணங்களால், மனிதன் முதன் முதலில் பயிரிட்ட காய்கறிகளில் வெங்காயமும் ஒன்று. வெங்காயத்தின் பிறப்பிடம் குறித்து இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.


5500 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் ஆசியாவில் வெங்காயம் பயிரிடப்பட்டதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். பாபிலோனிய நாகரீகம் உச்சத்தில் இருந்த நேரம், மத்திய தரைக்கடல் பகுதியில் வெங்காயம் பயிரிடப்பட்டதாக மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.

வெங்காயம் முறையான உணவு பொருளாக பயன்படுத்தப்படுவதற்கு முன்னரே, காட்டு வெங்காய வகைகள் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. இந்தியாவில், கி.மு 6ஆம் நூற்றாண்டை சேர்ந்த சரக்கா சன்ஹிதா என்ற மருத்துவ புத்தகத்தில் வெங்காயம் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.
First published: December 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading