6 கிலோ எடையை அசால்ட்டாக தூக்கிய ஒரு வயது குழந்தை - வைரல் வீடியோ!

6 கிலோ எடையை அசால்ட்டாக தூக்கிய ஒரு வயது குழந்தை

இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ள நெட்டிசன் ஒருவர், குழந்தையின் பளு தூக்கும் திறன்களைப் பார்த்து வியந்துந்துள்ளனர்.

  • Share this:
குழந்தைகள் என நினைக்கும் போது நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பொம்மைகளுடன் விளையாடும் மற்றும் வீட்டின் அருகே சுற்றி திரிவது போன்றவை தான் நமக்கு முதலில் நினைவிற்கு வரும். இந்த நிலையில் தற்போது ஷேர் செய்யப்பட்டுள்ள வீடியோ ஒன்றில் இந்த கருத்தை மாற்றும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அந்த வைரல் வீடியோவில் இடம்பெற்றுள்ள சூப்பர் ஸ்ட்ராங் பேபி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் ஒரு வயது குழந்தை 6 கிலோ எடையிலான பந்து ஒன்றை தூக்கும் காட்சிகள் அடங்கியுள்ளது.

ஒரு வயது குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் அவரது நண்பர்களுடன் பொம்மைகளைத் தேர்ந்தெடுப்பதில் பிஸியாக இருக்கும் வயதில், அவர் எடையை எப்படி தூக்குகிறார் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது. இதற்கிடையே பளு தூக்கும் ஒரு வயது குழந்தை என்ற தலைப்பில் இந்த வீடியோ வைரலாகிவிட்டது. வெறும் 17 வினாடிகள் அடங்கிய இந்த கிளிப்பில் , அந்த குழந்தை விடாமுயற்சியுடன் குந்து போன்ற நிலையில் குனிந்து பந்தை மேலே தூக்கி பின்னர் கீழே வைக்கிறது. பந்தை மெதுவாக மேலே தூக்கி சில நொடிகள் வைத்து மீண்டும் தரையில் வைக்கும் போது வாயில் பீடிங் நிப்பிள் வைத்திருப்பது தெரிகிறது.

எனினும் இந்த பளுதூக்கும் பணி அந்த குழந்தைக்கு கடினமாக தோன்றுகிறது, ஆனால் குழந்தை விடாமுயற்சியாக தூக்கிவிட்டு தான் கீழே வைக்கிறது. இந்த வீடியோவை பார்த்த அனைவரும் ஒரு வயது குழந்தையால் இது எப்படி சாத்தியமாகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கியூட் வீடியோ ஆன்லைனில் ஷேர் செய்யப்பட்டதில் இருந்து 61 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும், 2.3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கமெண்ட்ஸ்களையும் பெற்றுள்ளது.இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ள நெட்டிசன் ஒருவர், குழந்தையின் பளு தூக்கும் திறன்களைப் பார்த்து வியந்து, வரும்காலத்தில் இவர் ஒரு ஒலிம்பிக் வீரர் என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு யூசர், அந்த குழந்தை எடை தூக்கும் போது குழந்தையின் சரியான தோரணையை முன்னிலைப்படுத்தி கமெண்ட் செய்துள்ளார், அதில் தோள்பட்டை அகல நிலை, குந்தி அமர்ந்து பந்தை தூக்கும் விதம், மற்றும் இறுதியில் சக்திவாய்ந்த நகர்வு என்னை மிகவும் கவனிக்க வைத்தது என்றார்.

இதற்கிடையில், அவரது உடலில் பளு தூக்குவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து சிலர் கவலைப்பட்டனர். அதில் ஒருவர் நாம் மருத்துவர் அல்ல, ஆனால் இவ்வளவு எடையை தூக்குவது குழந்தையின் முதுகில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை யாரும் உணரவில்லையா? என தனது கவலையை கமெண்ட் செய்திருந்தார்.

மற்றவர்கள் இந்த வயதில் அதிக எடையை தூக்குவது குழந்தைக்கு குடலிறக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சிலர் அந்த குழந்தையின் பெற்றோர்களை திட்டியும் கமெண்ட் செய்துள்ளனர். எனினும் இந்த வீடியோ பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.
Published by:Vijay R
First published: