Home /News /trend /

ஓராண்டு பயணம் - 3,500 கி.மீ. கடந்து சென்று தன் கூட்டத்தோடு திரும்பி வந்த யானை

ஓராண்டு பயணம் - 3,500 கி.மீ. கடந்து சென்று தன் கூட்டத்தோடு திரும்பி வந்த யானை

 3,500 கி.மீ. கடந்து சென்று தன் கூட்டத்தோடு திரும்பி வந்த யானை

3,500 கி.மீ. கடந்து சென்று தன் கூட்டத்தோடு திரும்பி வந்த யானை

Trending | குஷா என்ற பெயரிலான, 36 வயதுடைய இந்த ஆண் யானை ஓராண்டு முழுவதும் 3,500 கி.மீ. தொலைவுக்கு பயணித்து அதன் வாழ்விடத்தை சென்றடைந்துள்ளது.

  வீட்டில் ஆடு, மாடு, நாய், பூனை என ஏதோ ஒரு வளர்ப்பு பிராணியை நீங்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதை வெளியிடத்துக்கு அழைத்துச் செல்லும்போது எங்காவது நீங்கள் விட்டுவிட்டு வந்துவிட்டால் அல்லது அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதியில் நீங்கள் அதை விற்பனை செய்திருந்தால் எப்படியாகினும் உங்கள் வீடு தேடி அது வந்துவிடும். அது இயல்பான விஷயம் தான்.

  ஆனால், ஒரு காட்டு யானை நீண்ட காலத்திற்குப் பிறகு, அதுவும் வெகு தொலைவு கடந்து சென்று தன் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டது என்று சொன்னால் நம்பும்படியாக இருக்கிறதா? ஆம், உண்மைதான். கர்நாடகாவைச் சேர்ந்த இந்த யானை அதன் வாழ்விடத்திற்கு திரும்பியதோடு மட்டுமல்லாமல், அதனுடன் ஒரு கூட்டத்தையும் திருப்பி அழைத்து வந்துள்ளது.

  குஷா என்ற பெயரிலான, 36 வயதுடைய இந்த ஆண் யானை ஓராண்டு முழுவதும் 3,500 கி.மீ. தொலைவுக்கு பயணித்து அதன் வாழ்விடத்தை சென்றடைந்துள்ளது.

  குஷா யானை இயல்பான வளர்ப்பு யானை கிடையாது. அது ஒரு காட்டு யானை. கடந்த 2016ஆம் ஆண்டில், மடிகேடி மாவட்டத்தை ஒட்டிய வனப்பகுதியில் தன் கூட்டத்தோடு சுற்றித்திரிந்த இந்த யானை, அவ்வபோது அருகாமையில் உள்ள காஃபி தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்தது. கிராம மக்கள் தொடர்பாக வனத்துறைக்கு தொடர் புகார் அளித்தனர்.

  Also Read : பள்ளியில் 26 முறை ஃபெயிலான நபருக்கு மாலை அணிவித்து மரியாதை - நடந்தது என்ன?


  இதைத்தொடர்ந்து, வனத்துறையினர் சில யானைகளைப் பிடித்து கூர்க் மாவட்டத்தில் உள்ள தூப்ரே யானைகள் புத்துணர்ச்சி முகாமுக்கு கொண்டு சென்றனர். அதில் குஷா யானையும் ஒன்று. புத்துணர்ச்சி முகாமில் மற்ற யானைகளோடு கலந்து அதுவும் இயல்பாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தது.,

  முகாமை விட்டு வெளியேறிய யானை

  2018ஆம் ஆண்டில் முகாமை விட்டு வெளியேறிய யானை தன் கூட்டத்தை தேடி புறப்பட்டது. ஆனால், வனத்துறை பணியாளர்கள் பல நாட்களாக தேடி அதை முகாமுக்கு திருப்பிக் கொண்டு வந்தனர். ஆனால், குஷா யானையை அதன் போக்கில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று விலங்கு நல அமைப்புகள் கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்தன.

  விடுவிக்கப்பட்ட யானை

  குஷா யானையுடன் வனத்துறையினர் மிக நெருக்கமாக பழகி வந்தனர். ஆனாலும் அதை விடுவிக்கும்படி அரசு உத்தரவிட்டது. இதனால், 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் யானையை லாரியில் ஏற்றி 400 கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள்ள பந்திபோரா வனப்பகுதியில் இறக்கி விட்டனர்.

  ரேடியோ சாதனம் மூலமாக கண்காணிப்பு

  வனப்பகுதியில் விடப்பட்ட குஷா யானையின் கழுத்தில் ரேடியா காலர் கருவி ஒன்று பொருத்தப்பட்டு அதன் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. தொடக்கத்தில் அது கேரள வனத்துறை பகுதிக்கு இடம்பெயர்ந்தது. பின்னர் மீண்டும் கர்நாடகத்திற்குள் நுழைந்த அந்த யானை ஓராண்டில் அங்கும், இங்குமாக 3,500 கி.மீ. பயணித்துள்ளது.

  கூட்டத்தோடு முகாம் திரும்பிய யானை

  ஓராண்டு பயணத்தின் நிறைவில் குஷா யானை மீண்டும் தூப்ரே பகுதியை ஒட்டி நடமாடுவது கண்காணிப்பு கருவி மூலமாக தெரிய வந்தது. யானைகள் எப்போதுமே குடும்பமாக வாழும் பழக்கம் கொண்டவை. அந்த வகையில் குஷா யானையுடன் தற்போது 3 பெண் யானைகள், ஒரு ஆண் யானை ஆகியவை சேர்ந்து உலா வருகின்றன.

  முகாமில் அனுமதிக்க கோரிக்கை

  குஷா யானை மற்றும் அதன் கூட்டத்தினர் அனைவரும் வனத்துறை பணியாளர்களோடு தற்போது நெருங்கிப் பழகி வருகின்றனர். ஆனால், குஷா யானையை முகாமில் இருந்து வெளியேற்றிய உத்தரவு காரணமாக அதை மீண்டும் சேர்த்துக் கொள்ள இயலவில்லை. இந்நிலையில், குஷா யானை மற்றும் அதன் கூட்டத்தை புத்துணர்ச்சி முகாமில் சேர்த்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு வனத்துறையினர் முறைப்படி கோரிக்கை வைத்துள்ளனர்.
  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Elephant, Trending, Viral

  அடுத்த செய்தி