ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஒரு மாணவன், ஒரு ஆசிரியர்... ஒரே ஒரு மாணவனுக்காக இயங்கும் பள்ளி... எங்கு தெரியுமா?

ஒரு மாணவன், ஒரு ஆசிரியர்... ஒரே ஒரு மாணவனுக்காக இயங்கும் பள்ளி... எங்கு தெரியுமா?

ஒரு மாணவன், ஒரு ஆசிரியர்.

ஒரு மாணவன், ஒரு ஆசிரியர்.

மகாராஷ்டிராவில் கிராமம் ஒன்றில் இயங்கும் ஆரம்பப் பள்ளியில் 3 ஆம் வகுப்பில் ஒரு மாணவர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Maharashtra, India

கிராமப்புற கல்வி மேம்பாடு என்பது இந்தியாவின் வறுமை ஒழிப்பிற்கான முதுகெலும்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சில கிராமங்களில் மட்டுமே கல்விக்கான தேவையை அறிந்து மக்கள் செயல்படுகின்றனர். பெரும்பான்மையான கிராமங்களில் வறுமையின் காரணமாக குழந்தைகளில் கல்வி என்பது கனவாகவே அமைந்து விடுகிறது. ஆனால் கல்வியின் தேவையை நாட்டிற்கே உணர்த்தும்படியாக பள்ளி ஒன்று மகாராஷ்டிராவில் செயல்பட்டு வருகிறது. அப்படி என்ன சிறப்பு இந்த பள்ளியில் என்று அனைவரும் புருவங்களை உயர்த்தலாம். மகாராஷ்டிராவில் அமைந்துள்ள ஜில்லா பரிஷத் தொடக்கப் பள்ளி ஒரு மாணவருக்காக ஒரு ஆசிரியரால் கற்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

கணேஷ்பூர் வாஷிம் மாவட்டத்தில் வெறும் 150 மக்கள்தொகை கொண்ட மிகச்சிறிய கிராமமாகும். அந்த கிராமத்தில் இயங்கும் ஆரம்பப் பள்ளியில் 3 ஆம் வகுப்பில் ஒரு மாணவர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார். பள்ளியில் 1 முதல் 4 வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்பட்டது. ஆனால்  ஒரு மாணவர் மட்டுமே கல்வி கற்பித்து வருகிறார் என்பதற்காக அந்த பள்ளியை நிர்வாகம் மூடவில்லை.

கிஷோர் மான்கர் அந்த பள்ளியின் ஒரே ஆசிரியர் ஆவார், அவர் ஒவ்வொரு நாளும் 12 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்து பள்ளிக்கு வந்து தனது ஒரே மாணவரான கார்த்திக் ஷேகோகருக்கு கல்வி கற்பிக்கிறார். வழக்கமாக மற்ற பள்ளிகள் செயல்படுவது போன்று தினமும் காலை தேசிய கீதம் பாடிய பின் வகுப்புகள் தொடங்கப்படுவதாக ஆசிரியர் கிஷோ் மான்கர் கூறியுள்ளார்.

கடந்த 2 வருடங்களாக இந்த பள்ளியில் ஒரு மாணவர் மட்டுமே படித்து வருகிறார். அந்த மாணவருக்கான ஒரே ஆசிரியர் நான் தான். எல்லா பாடங்களையும் அந்த மாணவருக்கு நான் தான் எடுப்பேன். மதிய உணவு உட்பட அரசின் அனைத்து நலதிட்டங்களும் அந்த மாணவருக்கு கிடைத்து வருகிறது. அரசு விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்கள் பள்ளிகள் செயல்படும். காலை 10.30 மணி முதல் 12 வரை வகுப்புகள் எடுக்கப்படும் என்கிறார் ஆசிரியர் கிஷோர் மான்கர். சமுதாயத்திற்கும் அதன் நலனுக்கும் பங்களிக்க விருப்பம் இருந்தால், முடியாதது எதுவுமில்லை என்பதை ஆசிரியர் கிஷோர் மான்கர் அனைவருக்கும் எடுத்துரைத்துள்ளார்.

First published:

Tags: Trending, Viral