Home /News /trend /

உலகின் மிகவும் விலை உயர்ந்த காபி தூள்... ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

உலகின் மிகவும் விலை உயர்ந்த காபி தூள்... ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

காட்சி படம்

காட்சி படம்

ஜக்கு பர்ட் காபி உலகிலேயே மிகவும் அரிதான அதே நேரம் விலை உயர்ந்த காபியாக கருதப்படுகிறது.

நீங்கள் காபி பிரியரா? ஆம் என்றால் இந்த உலகில் எத்தனை பேருக்கு காபி பிடிக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? குறைந்தபட்சம் எந்த நாடு அதிகமாக காபியை பயன்படுத்துகிறது என்பதாவது தெரியுமா? தோராயமாக உலகில் 30 முதல் 40 சதவீத மக்கள் காபியை பயன்படுத்துகிறார்கள். காபியை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் பின்லாந்து மற்றும் நெதர்லாந்து முன்னிலை வகிக்கிறது.

நீங்கள் jacu bird காபியை பற்றி கேள்விப்பட்டதுண்டா? இதுதான் உலகில் மிகவும் அதிக விலை அதிகமான காபி. விலை அதிகம் என்றால் எவ்வளவு இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? இந்திய மதிப்பில் ஒரு கிலோ வெறும் 78,000 ரூபாய் மட்டும் தான்.

இந்த jacu bird காபி உலகிலேயே மிகவும் அரிதான அதே நேரம் விலை உயர்ந்த காபியாக கருதப்படுகிறது. இது பிரேசில் உள்ள Camocim Estate இல் சிறிய அளவில் பயிரிடப்படுகிறது. இதை பயிரிட்டு வளர்க்கும் செலவே மிகவும் அதிகம் என்பதால் பலர் இதை பயிரிடுவதில்லை.

இதற்குப் பின்னால் ஒரு குட்டி கதை இருக்கிறது. Henrique Sloper de Arajo என்ற காபி பயிரிடுபவர் தான் இதற்கு காரணம். இந்த jacu bird என்ற பறவை அவருடைய விவசாய நிலத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வந்தது. உண்மையில் இந்த ஜாக்குபாடுக்கு காஃபி மிகவும் பிடித்தமான உணவாக இருந்தது.

இதனால் தனது விவசாய நிலத்தில் காஃபி பயிரிட்ட இவர் மிகப்பெரும் நஷ்டத்தை சந்தித்தார். இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். இவ்வளவு பிரச்சனை கொடுக்கும் பறவையை சுட்டுத் தள்ளிவிட வேண்டியது தானே என்று... அங்குதான் சிக்கலே! நம் ஊரைப் போல் பிரேசில் கிடையாது.

Jacu bird ஒரு அரிதான பறவை, அதைக் கொல்வது என்பது சட்டப்படி குற்றமாகும். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றார் இவர். எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு ஒரு முடிவு உண்டு தானே. அப்படித்தான் இவர் ஒரு இந்தோனேசிய யுக்தியை கையாண்டார்.

also read : கேன்சர் என பொய் சொல்லி ரூ. 43 லட்சத்தை சுருட்டிய பெண்.. என்ன செய்தார் தெரியுமா?

Saraiki Luwak என்ற காபி பவுடரை அந்த பறவை விட்டுச் செல்லும் கழிவுகள் மூலமாகவே தயாரித்தார். நீங்கள் நினைப்பது போல் நேரடியாக இல்லை. நிலத்திற்கு அந்த கழிவுகளையே உரமாக மாற்றினார். இதுதான் அவர் செய்த மிகச்சிறந்த வேலை. தன்னோடு பணியாற்றிய விவசாய தோழர்களுக்கு இவர் அழைப்பு விடுத்தார், அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு பக்கபலமாக இருந்தனர்.

என்னதான் நண்பர் அழைத்ததின் பேரில் வந்தாலும் மக்களுக்காக நல்ல காபி தயாரிக்க வேண்டும் என்பதில் அந்த தொழிலாளர்கள் மிகவும் முனைப்பாக செயல்பட்டனர். அதை மனதில் கொண்டு தான் அவர்கள் நல்ல காபியை பயிரிட்டு வளர்த்தனர். இந்த காபியின் சுவையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒருவேளை கூகுளில் தேடி உங்களால் வாங்க முடிந்தாலோ, அல்லது ஏதோ ஒரு உயர்தர உணவகத்தில் குடிக்க முடிந்தாலோ மட்டும்தான் உணர முடியும்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Viral News

அடுத்த செய்தி