Home /News /trend /

நாளை தொடங்கும் ஓணம் பண்டிகையின் ஸ்பெஷல்.. புலி களியாட்டம் பற்றி தெரிந்துகொள்வோமா!

நாளை தொடங்கும் ஓணம் பண்டிகையின் ஸ்பெஷல்.. புலி களியாட்டம் பற்றி தெரிந்துகொள்வோமா!

புலி களி

புலி களி

இந்த திருவிழா 'புலியின் நாடகம்' என்றும் அழைக்கப்படுகிறது. முக்கியமாக கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் ஸ்வராஜ் மைதானத்தில் நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thrissur, India
கேரளாவில் ஆண்டுதோறும் 10 நாள் மலையாள அறுவடைத் திருவிழாவான ஓணம் கொண்டாடப்படும். இந்த ஆண்டு அந்த திருவிழா ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 8 வரை நிகழ்த்தப்பட உள்ளது.

ஓணம் எனும் 10 நாள் அறுவடைத் திருவிழா, கேரள மாநிலத்தில் மலையாள ஆண்டு 'கொல்லவர்ஷமி'யின் தொடக்கத்தைக் குறிக்கிறது. பண்டிகை கொண்டாட்டத்தின் நான்காவது நாளில், இந்த பாரம்பரிய புலி களியாட்டம் அரங்கேறும்.

கேரளாவின் இந்த நாட்டுப்புற கலை வடிவத்தின் முக்கிய கருப்பொருள் புலி வேட்டையாடுதல். பக்தர்களுடன் புலி அல்லது வேடன் போல் வேடமிட்டு வேட்டையாடுபோல் நடிப்பர். அதற்கான ஒப்பனை எண்ணெய் வண்ணப்பூச்சுகளைப் பயன்படுத்தி பூசப்படுகிறது.

பக்தர்கள் தங்கள் முகத்திலும் உடலிலும் மஞ்சள், சிவப்பு அல்லது ஆரஞ்சு மற்றும் கருப்பு கோடுகளுடன் புலியைப் போல வண்ணம் தீட்டி புலி வேடமிட்டு புலி களி, என்றழைக்கப்படும் நாட்டுப்புற புலி நடனம் ஆடி கொண்டாடுவர்.இதில் முகம் உட்பட உடல் முழுவதும் பெயிண்ட் பூசிக்கொள்ளும் வழக்கத்தோடு , புலியின் வரிகள் போன்று உருவாக்கப்படும் உடலோடு ஓட்டும் ஆடைகளையும் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் புலி வேடமிடும் குழந்தைகளும் பெண்களும் இந்த ஆடையை அணிந்து கொள்கின்றனர்.

இந்த மேக்கப்பை அகற்றுவது மிகவும் கடினம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல், பல உள்ளூர்வாசிகளும் பார்வையாளர்களும் ஒவ்வொரு ஆண்டும் ஓணத்தின் போது திருச்சூர் தெருக்களில் களியாட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இந்த நடனத்தைப் பார்க்க உலகின் பல மூலை முடுக்குகளில் இருந்தும் வருகின்றனர்.

தகில், உடுக்கு மற்றும் செண்டை மேளம் போன்ற பாரம்பரிய தாள வாத்தியங்களின் தாளத்திற்கு ஏற்ப நடனமாடுவர். இதற்கான வண்ணமிடும் வேலை மணிக்கணக்கில் நடைபெறும். ஆனால்  இதைத் தங்கள் பாரம்பரியக் கடனாக நினைப்பதால் எவ்வளவு நேரம் ஆனாலும் வண்ணங்கள் பூசிக்கொண்டு நடனமாடுகின்றனர்.

இந்த திருவிழா 'புலியின் நாடகம்' என்றும் அழைக்கப்படுகிறது. முக்கியமாக கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் ஸ்வராஜ் மைதானத்தில் இந்த திருவிழா நடைபெறுகிறது. இதில் மக்கள் பல்வேறு தனித்துவமான சாயல்கள் மற்றும் முகமூடிகளில் தோன்றுவதைக் காணலாம். பல ஆண்கள் வர்ணம் பூசப்பட்ட உடல்கள் மற்றும் முகமூடிகளுடன் தெருக்களில் வந்து நடனமாடுவர்.

பயணிகள் கவனத்திற்கு : பெங்களூருவில் மிஸ் பண்ணக்கூடாத ஸ்பாட்கள் லிஸ்ட் இதோ!

வரலாறு:
புலி களி நடன வடிவம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு கொச்சியின் முன்னாள் ஆட்சியாளரான மஹாராஜா ராம வர்ம சக்தன் தம்புரான் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. மேலும் இது ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையின் போது வீரம் மற்றும் காட்டு விலங்குகளின் பாதுகாப்பிற்கு அடையாளமாக ஏராளமான பயிற்சி பெற்ற கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டது.

கேரளாவின் திருச்சூரில் புலி களி ஆண் கலைஞர்களின் பிரத்யேக காலை வடிவமாக இருந்தபோதிலும், 2016 ஆம் ஆண்டில் கேரள பெண்களின் குழு வழக்கமான பாலின தடைகளை உடைத்து, பாரம்பரிய புலி அலங்காரங்களை அணிந்துகொண்டு தெருக்களில் ஆண்களுடன் இணைந்து நடனமாடினர்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Festival, Kerala, Onam

அடுத்த செய்தி