முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / கொல்கத்தாவில் நவராத்திரி கொண்டாட்டம் கோலாகலம் - 11 அடி உயரம், 1000 கிலோ எடையில் துர்கா தேவி சிலை..!

கொல்கத்தாவில் நவராத்திரி கொண்டாட்டம் கோலாகலம் - 11 அடி உயரம், 1000 கிலோ எடையில் துர்கா தேவி சிலை..!

11 அடி உயர 1000 கிலோ எடை கொண்ட துர்கா சிலை

11 அடி உயர 1000 கிலோ எடை கொண்ட துர்கா சிலை

வட மாநிலங்களில் பிரம்மாண்டமாக ஊர் கூடி கொண்டாடும் அளவுக்கு நவராத்திரியை கோலாகலமாக கொண்டாடும் பழக்கம் உள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நாடு முழுவதும் நவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகளில் கொலு வைத்து, தினசரி பூஜை செய்து, விரதமிருந்து கொண்டாடுவது ஒரு பக்கம். தினசரி கோவிலுக்கு சென்று அம்பாளை தரிசித்து வருவது மறுப்பக்கம். வீடுகளில் சிறுமிகளை, பெண்களை அழைத்து விருந்து அளித்து, தாம்பூலம் வழங்கி அவர்களை அம்பாளின் சொரூபமாக வழிபட்டு ஆசி பெறுவதும் வழக்கம். வட மாநிலங்களில் பிரம்மாண்டமாக ஊர் கூடி கொண்டாடும் அளவுக்கு நவராத்திரி கோலாகலமாக கொண்டாடும் பழக்கம் உள்ளது.

குறிப்பாக, துர்கா தேவி, காளி அவதாரங்கள் என்று அம்பாளை, சக்தி தேவியை மேற்கு வங்காளத்தில், கொல்கத்தாவில் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். தசரா என்று 10 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழாவில், கடைசி 3 நாட்களான, அஷ்டமி, நவமி மற்றும் தசமி மிகவும் சிறப்பானவை. கொல்கத்தாவில் நடக்கும் துர்கா பூஜா பிரசித்தி பெற்றது.

கடந்த ஒரு வாரமாக, துர்கா பூஜைக்கான ஏற்பாடுகள் மேற்கு வங்காளத்தில் மும்முரமாக நடைபெற்று வந்துள்ளது. குறிப்பாக கொல்கத்தாவில், ஒவ்வொரு ஆண்டும் மிகவும் விமரிசையாக விதவிதமான தீம்களுடன் துர்கா பூஜை களைகட்டும். மண்டபம், பந்தல் அமைப்பது முதல் துர்கா தேவியின் சிலைகள் வரை, கொல்கத்தா வாசிகள் அனைவரும் தீவிரமாக ஆர்வம் காட்டி, பூஜைக்கான ஏற்பாடு செய்வார்கள்.

Read More : நேரம் சரியில்லை, ஜெயிலுக்கு போற மாதிரி இருக்கும் என்று ஜோதிடர் சொன்னால் கவலை வேண்டாம்!

அந்த வகையில், வடக்கு கொல்கத்தாவில் உள்ள பெனியாடோலா சர்போஜனின் துர்கா பூஜை நடத்தும் சமூகத்தில், 11 அடி உயரத்தில், எட்டு உலோகங்கள் பயன்படுத்தி, 1000 கிலோவில் துர்காதேவிக்கு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு, அதிகபட்ச எடையுள்ள சிலை துர்க்கை அம்மனுக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது இது தான் முதல் முறை என்று கொல்கத்தா துர்கா உத்சவ குழுவினர் கூறியுள்ளனர். தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், ஜின்க், டின், இரும்பு மற்றும் பாதரசம் ஆகிய எட்டு உலோகங்களின் கலவையால் இந்த சிலை செய்யப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 25 கலைஞர்கள் இரவும் பகலுமாக பணியாற்றி, 11 அடியில் அஷ்ட உலகங்களை கொண்ட துர்காதேவி சிலையை தயாரித்து பந்தல் அமைத்து அதை நிறுவி இருக்கிறார்கள். இதற்கு ₹35,00,000 செலவானது என்று கூறப்படுகிறது.

பல ஆண்டுகளாகவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நவராத்திரி கொண்டாட்டத்தின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது என்பதை கண்கூடாக காண முடியும். ஒவ்வொரு பகுதியில் வாழும் மக்களுமே அவர்களின் பாரம்பரியத்துக்கு ஏற்றவாறு நவராத்திரியை, பாரம்பரியம் மாறாத பண்டிகையாக கொண்டாடுகிறார்ர்கள். அந்த வகையில் வட மாநிலங்களில் துர்கா பூஜா என்பது இந்தியப் பண்டிகைகளில் தவிர்க்க முடியாத ஒரு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகைகளில் வங்காள மக்களுக்கு துர்கா பூஜா மிக மிக முக்கியமான ஒரு பண்டிகை ஆகும். துர்காஷ்டமி என்று கூறப்படும் நவராத்திரியின் அஷ்டமி திதி,  விமர்சையாக கொண்டாடப்படும். இந்த நாளில் தீய சக்திகள், கண்திருஷ்டி அனைத்தும் நீங்குவதற்கு மக்கள் துர்காதேவியை பூஜித்து ஆசி பெறுவார்கள்.

First published:

Tags: Kolkata, Navaratri, Trending, Viral