தந்தையின் மறுமணம் படங்களை ட்விட்டரில் பகிர்ந்த மகன் - நெட்டிசன்கள் வாழ்த்து

தந்தையின் மறுமணம் படங்களை ட்விட்டரில் பகிர்ந்த மகன் - நெட்டிசன்கள் வாழ்த்து

தந்தையின் மறுமணம் படங்களை ட்விட்டரில் பகிர்ந்த மகன்

ஷயோன் என்ற நபர் தனது ட்விட்டர் பக்கத்தில், தனது தந்தையின் மறுமணம் தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து கொண்டது வைரலாகி வருகிறது.

  • Share this:
பெற்றோர் பிள்ளைகளுக்கு வரண் தேடி திருமணம் செய்து வைப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற கதையோ வேறு. ட்விட்டரில் தனது தந்தையின் மறுமணம் தொடர்பான புகைப்படங்களை மகன் ஒருவர் பகிர்ந்த நிலையில், நெட்டிசன்களிடையே அந்த படங்கள் அதிகம் வைரலாகி வருகிறது.

வாழ்வில் ஒருவர் மீது மற்றொருவர் காட்டும் அன்பை நாம் காணும்போது இனம்புரியாத ஒரு ஏக்கம் நமக்குள் எழும். வழக்கத்திற்கு மாறாக அவர்களின் அன்புக்குரியவர்கள் இவ்வகையான திருமணத்தை செய்தால் அவர்கள் மனம் ஏற்குமா?

ஷயோன் என்ற நபர் தனது ட்விட்டர் பக்கத்தில், தனது தந்தையின் மறுமணம் தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து கொண்டதன் மூலம் அவரது தந்தையின் மறுமணத்தை பலருக்கும் தெரிவித்தார். கொரோனா நிலைமையை மனதில் கொண்டு அந்த திருமண விழாவில் விருந்தினர்கள் பெரும்பாலும் மாஸ்க்குகளை அணிந்திருந்தனர்.



தனது தந்தையின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் அடங்கிய பதிவில், ”எனது தந்தையின் திருமணம் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக, குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்துகொண்டனர். எனக்கு இந்த நிகழ்வு, ஒரு கனவைப் போலவே உள்ளது. எனது தாய் இறந்து 10 வருடங்கள் தனியாக இருந்த என் தந்தை மீண்டும் தனது காதலைக் கண்டுபிடித்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also read: INDvsAUS T20 | நடராஜனுக்கு வாய்ப்பு... பும்ரா இந்திய அணியில் இடம்பெறாதது ஏன்?

இதற்கு ரிதுபர்ணா சாட்டர்ஜி என்ற ட்விட்டர் பயனர் கருத்து தெரிவிக்கையில், ஷயோன் “நீங்கள் ஒரு நல்ல மனிதர். உங்களைப் போன்றவர்கள் நாட்டிற்கு அதிகம் தேவை” என்றார். ரிதுபர்ணாவின் கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக ”சரியாக சொன்னீர்கள்” என்று பல பயனர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஷயோனின் தந்தையின் 2வது திருமணம் என்று கருத்து தெரிவித்த மற்றொரு பயனர், ஷயோனின் தந்தை முதல்முறையாக திருமணம் செய்துகொள்ளும்பொழுது ஷயோனுக்கு திருமணத்தை காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறினார். மேலும் இதற்கு ஷயோனின் தந்தையை வாழ்த்தினார். இந்த கருத்துக்கு தனது தந்தையின் மொபைல் எண்ணை எடுத்து அவரிடமிருந்து சில டேட்டிங் உதவிக்குறிப்புகளைப் பெறவேண்டும் என்று ஷயோன் பதிலளித்தார்.

அன்பிற்கு வயது, நிறம் என எதுவும் கிடையாது. அந்த வகையில், பலரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக மேற்சொன்ன கதை அமைந்துள்ளது. வயதானாலும், மனிதர்களுக்குள் இருக்கும் அன்பைக் கண்டுபிடிக்கும் இந்த தனித்துவமான கதை பலரின் இதயத் துடிப்புகளை எப்போதும் ஆக்ட்டிவாக வைத்திருக்கும். இந்த வயதிலும் தந்தையின் மறுமணத்திற்கு எந்தவித மறுப்பும் காட்டாமல், அதனை ஏற்றுக் கொண்டதற்கும் பலர் ஷாயோனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஷாயோனின் இந்த பதிவு இணையதளத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: