• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • மகள் பிறப்பை கொண்டாடிய வியாபாரி - கடையில் குவித்த கூட்டம்... அப்படி என்ன செய்தார் தெரியுமா?

மகள் பிறப்பை கொண்டாடிய வியாபாரி - கடையில் குவித்த கூட்டம்... அப்படி என்ன செய்தார் தெரியுமா?

மகள் பிறப்பை கொண்டாடிய வியாபாரி

மகள் பிறப்பை கொண்டாடிய வியாபாரி

என்னுடைய ஆசையை நிறைவேற்றும் வகையில் ஆகஸ்ட் மாதம் எனக்கு பெண் குழந்தை பிறந்தது

  • Share this:
மகன் பிறந்தநாளில் அண்மையில் மகள் பிறந்ததை கொண்டாடும் விதமாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் ஆயிரக்கணக்கானோருக்கு இலவசமாக பானிப்பூரியை வழங்கியுள்ளார்.

மத்தியப்பிரதேசம், போபால் பகுதியில் உள்ள கோலார் அன்சால் குப்தா வசித்து வருகிறார். அப்பகுதியில் சிறியதாக பானிப்பூரி கடை ஒன்றை நடத்தி வரும் அவருக்கு ஆகஸ்ட் 17 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு மகன் பிறந்துள்ள நிலையில், புதியதாக தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செப்டம்பர் 12ம் தேதி அவருடைய மகனின் பிறந்நாளாகும். ஆனால், அந்த நாளில் மகனின் பிறந்தநாளைக் கொண்டாடாமல், மகளின் பிறப்பை கொண்டாட முடிவெடுத்துள்ளார். அதன்படி, கடைக்கு வரும் அனைவருக்கும் இலவசமாக பானிப்பூரி வழங்கப்படும் என முன்பே அறிவித்துள்ளார்.

செப்டம்பர் 12ம் தேதியன்று அவரது கடையில் சுமார் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளார். வருகை தந்த அனைவருக்கும் இலவசமாக பானிப்பூரியைக் கொடுத்துள்ளார். கடைக்கு வந்த சாப்பிட்ட அனைவரும் அன்சால் குப்தாவையும், அவரது குடும்பத்தையும் மனதார வாழ்த்திச் சென்றனர். இது குறித்து பேசிய அவர், "எனக்கு மகள் வேண்டும் என்று திருமணம் ஆனது முதல் மிகவும் ஆசைப்பட்டேன். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகன் பிறந்தான். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் மகள் வேண்டும் என்பது விருப்பமாக இருந்தது.

என்னுடைய ஆசையை நிறைவேற்றும் வகையில் ஆகஸ்ட் மாதம் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. இது எனக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சியைக் கொடுத்தது. அப்போது இருந்து மகளின் பிறப்பைக் கொண்டாட வேண்டும் என விரும்பினேன். செப்டம்பர் 12 ஆம் தேதி என்னுடைய மகனுடைய பிறந்தநாள். அன்றைய நாளில் மகளுடைய வருகையை கொண்டாட திட்டமிட்டுவிட்டேன். அன்றைய நாளில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பானிப்பூரி வழங்கப்படும் எனவும் அறிவித்தேன். எதிர்பார்த்ததுபோலவே மக்கள் கூட்டம் அலைமோதியது, ஆயிரக்கணக்கானோர் கடைக்கு வந்தனர்.

Also read... போக்குவரத்து சிக்னலில் நடனமாடிய பெண் - தீயாக பரவும் வீடியோ!

அனைவருக்கும் இலவசமாக பானிப்பூரியைக் கொடுத்தேன். இதனால் எனக்கு மகிழ்ச்சியே" எனத் தெரிவித்தார். எவ்வளவு பேர் சாப்பிட்டார்கள் என அவரிடம் கேட்டபோது அதற்கு பதிலளித்த அன்சால் குப்தா, " வழக்கமாக வரும் கூட்டத்தைவிட 10 மடங்குக்கும் மேலாக அன்றைய நாள் கூட்டம் இருந்தது. ஏறத்தாழ 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பானிப்பூரியை இலவசமாக கொடுத்துள்ளேன்" எனத் தெரிவித்தார். மகன் பிறந்தநாளில் மகள் பிறப்பை கொண்டாடியது ஏன்? என்ற கேள்விக்கு அவர் கொடுத்த பதில் அனைவரையும் வியப்படைய வைத்தது.

" எனக்கு பெண் குழந்தை வளர்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. பெண் குழந்தைகள் மீது பாகுபாடு காட்டக்கூடாது. பெண் குழந்தைகளை சுமையாக நினைக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரை அவர்கள் சுமை அல்ல, வரம். இது அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இலவசமாக பானிப்பூரி கொடுத்து, வெகுவிமர்சையாக கொண்டாடினேன்" என கூறினார். இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், அன்சால் குப்தாவுக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்தும், பாராட்டும் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: