ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

அடக்கொடுமையே நடுரோட்டில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த நிலை; சிக்கிய அப்பாவி இளைஞர்! 

அடக்கொடுமையே நடுரோட்டில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த நிலை; சிக்கிய அப்பாவி இளைஞர்! 

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video | நடுரோட்டில் ஸ்கூட்டரில் இருந்து தானாக விழுந்த பெண் ஒருவர் பின்னால் இருசக்கர வாகனத்தில் அமைதியாக வந்த நபரிடம் சண்டைக்கு சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

சாலை விபத்துக்கள் தொடர்பான பல அதிர்ச்சியளிக்க கூடிய வீடியோக்கள் இணையத்தில்  வைரலாகி வருகின்றன. லாரி, பஸ், கார், இருசக்கர வாகனம் என அனைத்து வகையான வாகனங்களும் விபத்துக்குள்ளாகும் வீடியோக்கள் தெருவுக்கு தெரு இருக்கும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி, காண்போரை கதிகலங்க வைப்பது உண்டு. அதேபோல் சில வேடிக்கையான அல்லது ஆச்சர்யப்பட வைக்கும் வீடியோக்களும் ஏராளம். தற்போது இணையத்தை அப்படியொரு வீடியோ தான் கலக்கி வருகிறது.

விபத்துகள் எங்கும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். இதைக் கருத்தில் கொண்டு மக்கள் கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும். மக்கள் தங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்ளாததால் சாலை விபத்துக்கள் அடிக்கடி சண்டைகளுக்கு வழிவகுக்கும். தற்போது இணையம் முழுவதும் பரவி வரும் சமீபத்திய காணொளி இதை நிரூபித்துள்ளது.

இப்போது வைரலாகி வரும் வீடியோவில், ஸ்கூட்டரில் செல்லும் ஒரு பெண்ணும் அவரது தோழியும் திடீரென தானாக நடுரோட்டில் விழுகின்றனர். ஆனால் அவர்களுக்குப் பின்னால் பைக் ஓட்டுபவர் மீது குற்றம் சாட்டி, அந்த பெண்கள் சண்டையிடும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ‘நான் பாட்டுக்கு சிவனேன்னு தானடா போய்க்கிட்டு இருந்தேன்’ என அடிக்கிற வெயிலுக்கு பாதுகாப்பாக முகத்தை துப்பாட்டாவால் கட்டிக்கொண்டு, இரண்டு பெண்கள் ஸ்கூட்டியில் செல்கின்றனர். அப்படி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, அவர்கள் வண்டி லேசாக ஆட்டம் கண்டு, இருவரும் வண்டியில் இருந்து கீழே விழுகின்றனர். அவர்கள் எதிர்பாராத விதமாக விழுந்திருந்தாலும், பின்னால் வந்த பைக் ஆசாமியிடம் ‘நீ தான் எங்கள இடிச்சியா?’ என சண்டை போடும் வீடியோ இணையத்தில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Also Read... சாதிக்க வயது ஒரு தடை இல்லை! 64 வயதில் அசத்தலாக கால்பந்தை சுழற்றும் தாத்தா.. வைரல் வீடியோ..

ஆனால் உண்மை என்னவென்றால், பின்னால் பைக்கில் வந்தவர் அவர்கள் நலமாக இருக்கிறார்களா என்று பார்க்கத்தான் உடனே நிறுத்துகிறார். இதனிடையே கீழே விழுந்த பெண், அந்த நபரை நோக்கி "பார்த்து சவாரி செய்ய முடியவில்லையா" என்று கேட்கிறார். அந்த பைக்,  ஸ்கூட்டர் அருகில் கூட இல்லை என்று அந்த இளைஞன் எவ்வளவு சொல்லியும், அவர்கள் நம்பவில்லை. தாங்களே தான் கீழே விழக்காரணம் என்பதையும் அவர்கள் ஏற்கவில்லை.

இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில், ‘இந்த வீடியோவை உடனே அந்த பெண்களிடம் யாராவது காட்டி உண்மையை புரிய வையுங்கள்’ என்றும் சிலரும், ‘பெண்கள் எப்போதுமே ஆண்கள் மீது குறை சொல்வதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள்’ என சிலரும் கமெண்ட்களை வாரிக்குவித்து வருகின்றனர். இந்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டு, இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Viral Video