ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

பில்கேட்ஸா இது? மேடையில் இப்புடி டான்ஸ் போடுறாரு - மீண்டும் இணையத்தில் வைரல்!

பில்கேட்ஸா இது? மேடையில் இப்புடி டான்ஸ் போடுறாரு - மீண்டும் இணையத்தில் வைரல்!

பில்கேட்ஸ்

பில்கேட்ஸ்

Bill Gates | விண்டோஸ் 1995 அறிமுக விழாவில், பில்கேட்ஸ் கூச்ச சுபாவத்துடன் நடனமாடியும், பாடியும் இருப்பது போன்று வீடியோவில் அமைந்துள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

'நீ என்ன பெரிய பில் கேட்ஸா'? என்ற வார்த்தையை சிறு வயதில் இருந்தே நாம் அதிகளவில் கேட்டிருப்போம். ஆம் உலக அளவில் கடந்த 1995 முதல் 2017 வரை பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகுத்தவர் பில் கேட்ஸ். மைக்ரோசாப்ட் நிறுவனரும், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக இவர் பல இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் தொழில் அதிபராக விளங்கி வருகிறார். இருவரை மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இதன் எளிய பயன்பாடு மற்றும் குறைவான விலையின் காரணமாக ஆப்பிள் நிறுவன கருவிகளை விட மிக அதிகளவு windows pC மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறு மக்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ள இந்நிறுவனம் கடந்த 1995 ஆம் ஆண்டு வின்டோஸ் அறிமுகம் செய்யப்பட்டது. மிகவும் கோலாகலமாக உலகின் முதல் விண்டோஸ் தொடங்கப்பட்ட நிலையில், பில்கேடஸ் உள்பட அவரது சகாக்கள் நடனம் ஆடும் வீடியோ ஒன்றை நெட்டிசன்கள் மீண்டும் இணையத்தில் வைரலாகியுள்ளனர். அப்படி என்ன தான் அந்த வீடியோவில் இருந்தது என நாமும் இங்கே அறிந்துக் கொள்வோம்.

Also Read : 9 இளம்பெண்களை திருமணம் செய்தவருக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!

விண்டோஸ் 1995 அறிமுக விழாவில், பில்கேட்ஸ் கூச்ச சுபாவத்துடன் நடனமாடியும், பாடியும் இருப்பது போன்று வீடியோவில் அமைந்துள்ளது. இந்த வீடியோவை மீண்டும் இணையத்தில் பார்த்த நெட்டிசன்கள், பில்கேட்ஸ் கூச்சத்துடன் ஆடியுள்ளதால் nerd என்று கலாய்த்துள்ளனர். மிகவும் அருமையாக உள்ளது என்றும், நிச்சயம் முதல் வெற்றியை இப்படித் தான் கொண்டாட வேண்டும் எனவும், பார்ப்பதற்கே மிக மகிழ்ச்சியாக உள்ளது என பதிவிட்டுள்ளனர்.

மற்றொரு டிவிட்டர் யூசர், தற்போது நாம் அதிகமாக உபயோகிக்கும் விண்டோஸ் இவ்வளவு சாதாரணமாக அறிமுகம் செய்யப்பட்டதா? எனவும் இன்றைக்கு எல்லாம் இதுப்போன்ற நிகழ்வுகள் மிகவும் ஆடம்பரமாகத்தான் நடைபெறும் அல்லலா? என கேள்வி எழுப்பியுள்ளனர். இதோடு பில்கேட்ஸை கலாய்த்து அனுப்பிய செய்திகளைப் பார்த்த நெட்டிசன்கள், இன்னும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் தற்போது ஆடியிருக்கும் வீடியோவைப் பார்த்து பலர் நிச்சயம் கலாய்பார்கள் என்பது போன்ற கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் இவ்வளவு எளிமையானவரா? பில்கேட்ஸ்..டான்ஸ் ஆடத் தெரிகிறதோ? இல்லையோ? தன்னுடைய படைப்பின் அறிமுக விழாவில் தனது பங்களிப்பை அளிக்க முயற்சி செய்தமைக்குப் பாராட்டுக்கள் என்பது போன்ற பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். பில்கேட்ஸின் நடனம் குறித்த வீடியோ மீண்டும் இணையத்தில் வைரலான நிலையில் இதுவரை 7 ஆயிரம் லைக்குகளையும், 6.6 மில்லியன் பார்வையாளர்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Trends, Viral