ஹெல்மெட் இல்லையா என்ன செய்வது...? ஐபிஎஸ் அதிகாரி வெளியிட்ட வைரல் வீடியோ

news18
Updated: September 5, 2019, 1:51 PM IST
ஹெல்மெட் இல்லையா என்ன செய்வது...? ஐபிஎஸ் அதிகாரி வெளியிட்ட வைரல் வீடியோ
கோப்புப் படம்
news18
Updated: September 5, 2019, 1:51 PM IST
ஹெல்மெட் இல்லையெனில் என்ன செய்வது என்பதை நகைச்சுவையாகக் கூறும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதை ஹரியான மாநில ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர்பான தமிழக அரசின் அரசாணையும் வெளியாகியுள்ளது. அதன்படி போக்குவரத்து விதிகளை மீறினால் விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியவில்லை என்றால் ரூ. 1000 அபராதம், லைசென்ஸ் இல்லையென்றால் ரூ.5000 என்பது போன்று அபராதக் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளன.


சமீபத்தில் டெல்லியில் ஆவணங்கள், லைசென்ஸ் உள்ளிட்ட எதுவுமின்றி பயணித்த இளைஞர் ஒருவருக்கு ரூ.23,000 அபராதம் விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் ஹெல்மெட் இல்லையெனில் என்ன செய்வது என்பதை நகைச்சுவையாகக் கூறும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், ஹெல்மெட் இல்லை என்பதால் வாகன ஓட்டிகள் தங்களது இருசக்கர வாகனங்களில் இருந்து இறங்கி வாகனத்தை உருட்டிச் செல்கின்றனர்.



இந்த வீடியோவை ஹரியானா மாநில ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் தனது பதிவில், “இந்த வீடியோ ரசிக்கும்படியாக இருக்கிறது. போக்குவரத்துத் துறை அபராதத்தில் இருந்து தப்பிக்க புதுமையான வழி. இம்மாதிரியான சூழ்நிலைகளைத் தவிர்க்க போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது பழைய வீடியோ என்றாலும், தற்போதைய சூழல் இப்படியாக இருப்பதால், நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் படி உயர்த்தப்பட்ட அபராதத்தை கீழே உள்ள அட்டவணையில் தெரிந்துகொள்ளலாம்...



























































































































Section/ Offence Old Penalty New Penalty (Minimum)
General (177) Rs 100 Rs 500
Rules of road regulation violation (new 177A) Rs. 100 Rs 500
Travelling without a ticket (178) Rs 200 Rs 500
Disobedience of orders of authorities (179) Rs 500 Rs 2000
Unauthorized use of vehicles without licence (180) Rs 1000 Rs 5000
Driving without licence (181) Rs 500 Rs 5000
Driving without qualification (182) Rs 500 Rs 10,000
Oversized vehicles (182B) New Rs 5000
Over speeding (183) Rs 400 Rs 1000 for LMV, Rs 2000 for Medium Passenger Vehicle
Dangerous driving penalty (184) Rs. 1,000 Upto Rs 5000
Drunken driving (185) Rs 2000 Rs 10,000
Speeding/ Racing (189) Rs 500 Rs 5,000
Vehicle without permit (192A) Upto Rs 5000 Upto Rs 10,000
Aggregators (violations of licencing conditions) (193) New Rs 25,000 to Rs 1,00,000
Overloading (194) Rs 2,000, and Rs 1,000 per extra tonne Rs 20,000, and Rs 2,000 per extra tonne
Overloading of Passengers (194A) N.A. Rs 1000 per extra passenger
Seat Belt (194 B) Rs 100 Rs 1,000
Overloading of two-wheelers (194 C) Rs 100 Rs 2,000 , Disqualification of licence for 3 months
Not providing way for emergency vehicles (194E) New Rs 10,000
Driving without insuarance (196) Rs 1,000 Rs 2,000
Offences by Juveniles (199) New Guardian/ Owner shall be deemed guilty. Rs 25,000 with 3 years imprisonment. Juvenile to be tried under JJ Act. Registration of Motor Vehicle to be cancelled.
Power of officers to impound documents (206) N.A. Suspension of driving licence under sections 183, 184, 185, 189, 190, 194C, 194D, 194E,
Offences committed by enforcing authorities (210B) N.A. Twice the penalty under the relevant section

வீடியோ பார்க்க: டிக்-டாக் செயலியில் அறிமுகமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

First published: September 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...