வயது என்பது எண் தான் - குட்டிக் கரணம் செய்து அசத்திய வயதான நபர்!

வயது என்பது எண் தான் -  குட்டிக் கரணம் செய்து அசத்திய வயதான நபர்!

குட்டிக் கரணம் செய்து அசத்திய வயதான நபர்!

ஜிம்னாஸ்டிக்ஸில் ஒரு குட்டிக் கரணம் என்பது நீங்கள் குதிக்கும் போது, ​​தலையின் வழியாக உடலின் முழுமையான திருப்பம் ஆகும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
வயதான நபர் ஒருவர் குட்டிக் கரணம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஒரு வயதானவர் குட்டிக் கரணம் செய்ததன் மூலம் அவருக்கு ‘வயது என்பது ஒரு எண்’ மட்டுமே என்பதை நிரூபித்துள்ளார். அவர் பூங்காவில் நேரம் செலவிட வந்த நேரத்தில் இந்த முயற்சியை எடுத்துள்ளார். ‘அங்கிள் கா ஸ்வாக்’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் அந்த வீடியோ கிளிப்பில், வயதான ஒருவர் முதலில் சோமர்சால்ட் செய்ய முயன்ற போது, சரியாக செய்ய தவறினார். இருப்பினும், அவர் அத்துடன் நிறுத்தி விடவில்லை, அடுத்த கணத்தில் தனது வலிமையை நிலைநிறுத்தி வேகமான சோமர்சால்ட் செய்தார். ஜிம்னாஸ்டிக்ஸில் ஒரு சோமர்சால்ட் என்பது நீங்கள் குதிக்கும் போது, ​​தலையின் வழியாக உடலில் உடலின் முழுமையான திருப்பம் ஆகும். இதனை ஒரு வயதான ஒருவர் செய்திருப்பது அசாதாரமான ஒன்றே. இதனை பார்த்த அனைவரும் அந்த வயதான நபரின் நகர்வுகளை கண்டு திகைத்தனர்.

ஒரு பெரியவர் அவருக்கு இது ஒரு பெரிய விஷயமல்ல என்பது போல அந்த காட்சிகள் தெரிகிறது. இந்த வீடியோ கிளிப்பின் தலைப்பில், "மாமா கா ஸ்வாக் வைரல் வீடியோ" என குறிப்பிட்டுள்ளனர். மேலும் பூங்காவில் விளையாடும் குழந்தைகள் அவரின் செயலால் ஆச்சரியப்படும் வகையிலான காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ யூடியூப்பில் பல முறை ஷேர் செய்யப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான கமெண்ட்களையும் பெற்றுள்ளது.

சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற பல்வேறு வீடியோக்களை நாம் காண முடியும். முன்னதாக ஸ்கேட்டிங் போர்டுடன் ஒருவர் சாகசம் நிகழ்த்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.

Also read... 2021ம் ஆண்டில் பூமியை கடந்த மிகவும் அபாயகரமான சிறுகோள் இதுதான்!

அந்த வீடியோ ‘ஹவுஸ் ஆஃப் ஹைலைட்ஸ்’ என்ற இன்ஸ்டாகிராம் ஷேர் செய்யப்பட்டிருந்தது. அதில் ஒருவர் ஸ்கேட்டிங் போர்டைப் பயன்படுத்தி தரையிறங்கும் போது சில ஸ்டண்ட்களை செய்கிறார். இருப்பினும், அவர் ஸ்டண்டின் ஒரு பகுதி போல விரைவாக எழுந்தார். அந்த வீடியோ இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும், லட்சக்கணக்கான கமெண்ட்ஸ்களையும் பெற்றுள்ளது.

மேலும் 34 வயதான டேமியன் வால்டர்ஸ் ஒரு தொழில்முறை மற்றும் திரைத்துறையில் அவரது துணிச்சலான சாகசங்களுக்காக அறியப்பட்டவர். இவர் ஸ்டண்ட்மேன் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடக்கூடியவர். ஆனால் இவரோ வேகமாக கார் ஓட்டி செல்லும் போது ஸ்டண்ட் நடவடிக்கைகளில் ஈடுபடுவார். 100 கிமீ / மணிநேர வேகமான ஃபார்முலா இ காரில் வால்டர்ஸ் பின்தங்கிய சோமர்சால்ட்டை செய்து அசத்தியுள்ளார். இதுபோல தினமும் சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் ஷேர் செய்யப்படுகிறது. அவற்றில் சிறப்பானதே நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர் .உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: