ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மறதியால் மூன்று முறை லாட்டரி வாங்கிய வயதான தம்பதிக்கு அடிச்ச ஜாக்பாட்!

மறதியால் மூன்று முறை லாட்டரி வாங்கிய வயதான தம்பதிக்கு அடிச்ச ஜாக்பாட்!

லாட்டரி

லாட்டரி

முட்டாள்தனமான தவறு அவர்களை ஜாக்பாட் வெல்ல வைக்கும் என்று அவர்களுக்குத் தெரியாது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

அமெரிக்காவின் மேரிலாந்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் ஒரே மாதிரியான மூன்று லாட்டரி சீட்டுகளை தவறுதலாக வாங்கியுள்ளார். அனைத்திலும் வெற்றி பெற்று $150,000 லாட்டரி ஜாக்பாட்டை வென்றார்.

மிரர் யுகே பத்திரிக்கை கூற்றுப்படி, 67 வயதான டவ்சனைச் சேர்ந்த ஒருவர், ஒரு முக்கியமான அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருகிறார். அதற்கு பணம் சேர்த்த அவர் அதிக லாட்டரி சீட்டுகளை வாங்குவது வழக்கமாகி விட்டார். குலுக்கலில் 5 பேரை தேர்ந்தெடுக்கும் ஒரு லாட்டரியில் ஒரு சீட்டை வாங்க நினைத்துள்ளார்.

செப்டம்பர் 20 முதல் 25 வரையான குலுக்கலுக்கான சீட்டை தான் ஏற்கனவே மதியம் மற்றும் மாலை என்று வாங்கியதை மறந்துவிட்டு மீண்டும் 22 மாலை ஒன்றை வாங்க தனது மனைவியை அனுப்பியுள்ளார். அவர் ஏற்கனவே இரண்டு முறை டிக்கெட்டுகளை வாங்கியதை அறியாத அவரது மனைவி, அதே குலுக்கலுக்கான மூன்றாவது டிக்கெட்டை அவரிடம் வாங்கியுள்ளார்.

ஒரே டிராவில் இருந்து மூன்று டிக்கெட்டுகளைப் பெற்றதைக் கண்டுபிடித்த பிறகு, வயதான தம்பதியினர் பணத்தை வீணாக்குவதைப் பற்றி வருத்தப்பட்டனர், ஆனால் முட்டாள்தனமான தவறு அவர்களை ஜாக்பாட் வெல்ல வைக்கும் என்று அவர்களுக்குத் தெரியாது.

டைம்ஸ் இதழின் உலகின் டாப் 100 வளர்ந்து வரும் நட்சத்திரங்களின் பட்டியலில் ஆகாஷ் அம்பானி!

அவரது அதிர்ஷ்டம் மொத்தமும் சேர்ந்து கதவை தட்டியது போல அவர் வாங்கிய மூன்று டிக்கெட்டுகளுக்கும் லாட்டரி பரிசு விழுந்துள்ளது. மொத்தம் $150,000 பரிசைப் பெற்றார். வெற்றி எண் அவரது மனைவியின் பிறந்தநாளின் அடிப்படையில் அமைந்துள்ளது என்று மகிழ்ச்சியில் திளைக்கிறார்.

மேரிலாந்து முதியவர்கள் லாட்டரியில் பெரிய வெற்றியைப் பெறுவது இது முதல் முறை அல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் நான்கு பந்து பில்லியர்ட்ஸ் விளையாட்டில் ஒரு பெரிய பரிசை வென்றார் என்று கூறப்படுகிறது. முந்தைய வெற்றியும் தவறு காரணமாக நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

டிராவின் போது, ​​வயதானவர் தனது மகளின் பிறந்த ஆண்டான 1979 இல் விளையாட விரும்பினார். இருப்பினும், கடையில் உள்ள எழுத்தர் தவறாகக் கேட்டு அவருக்கு 1997 என்ற தவறான எண்ணைக் கொடுத்தார். அன்றைய தினம், அவர் ஜாக்பாட் வெற்றிபெற்ற நான்கு இலக்கங்கள் என்னவென்று பார்த்தார். அது 1997. பரிசு மழை தான்

Published by:Ilakkiya GP
First published:

Tags: Jackpot, Lottery, USA