முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / இப்படியும் விளம்பரம் செய்யலாமா?... பட்டையை கிளப்பும் ஓலா சிஇஓ-வின் ‘ட்விட்’

இப்படியும் விளம்பரம் செய்யலாமா?... பட்டையை கிளப்பும் ஓலா சிஇஓ-வின் ‘ட்விட்’

வைரலாகும் ட்வீட்

வைரலாகும் ட்வீட்

எலக்ட்ரிக் வாகனங்களால் நமது பர்சுக்கும், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு நிச்சயம். இந்த மனநிலையில் மக்கள் இருக்கும் போது பவிஷ் அகர்வாலின் டிவிட்டர் பதிவு கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றமில்லை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் ட்விட்டரில் பதிவு செய்த கருத்து ஒன்று அந்த நிறுவனத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக மாறியுள்ளது. இதனால் தங்கள் ஸ்கூட்டர்களின் விற்பனை எகிறும் என எதிர்பார்பில் இருக்கிறார்கள் அந்நிறுவன அதிகாரிகள். ஓலா நிறுவனம் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். ஓலாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கனிசமாக விற்பனையாகி வருகிறது. பல மாடல்களில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது ஓலா நிறுவனம்.

இந்நிலையில் ஓலா நிறுவனத்தின் சிஇஓ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு ஒன்று இப்போது எக்குத்தப்பாக வைரலாகி வருகிறது.

ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் அண்மையில் பெங்களூரு சென்றிருந்தார். அப்போது சாலையில் ஜொமேட்டா நிறுவனத்தின் டெலிவரி செய்யும் நபர் ஒருவர் சிக்னலில் தனது இருசக்கர வாகனத்தில் காத்திருப்பதை பார்த்துள்ளார். உடனே இறங்கி்ச் சென்று அந்த நபருடன் பேச்சுக் கொடுத்துள்ளார். ஏன் என்றால் டெலிவரி பாய் வைத்திருந்தது ஓலா ஸ்கூட்டர். ஓலா ஸ்கூட்டரின் செயல்பாடு திருப்தி அளிக்கிறதா எனக் கேட்டுள்ளார் பவிஷ் அகர்வால்.

உடனே சந்தோஷ் என்கிற அந்த டெலிவரி பாய் ஓலா ஸ்கூட்டரின் அருமை பெருமைகளை எடுத்துக் கூறியுள்ளார். இத்தனைக்கும் தன்னுடன் பேசிக் கொண்டிருப்பது ஓலா நிறுவனத்தின் சிஇஓ என்பதை அறியாமலேயே. தான் இரண்டு ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வைத்திருப்பதாகவும், ஒன்றை சார்ஜிங் ஸ்டேசனில் விட்டுவிட்டு மற்றொன்றில் டெலிவரி செய்யும் பணியை மேற்கொள்வதாகவும் கூறியுள்ளார் சந்தோஷ். ஓலா ஸ்கூட்ட்ர் வாங்கிய பிறகு ஒன்பது மாதங்களில் தான் ஐம்பதாயிரம் கிலோமீட்டர் பயணம் செய்துள்ளதாகவும், ஆனால் எரிபொருள் வகையில் மட்டும் தான் ஒரு லட்சம் ரூபாய் சேமித்திருப்பதாகவும் கூறியுள்ளார் சந்தோஷ்.

சந்தோஷின் வார்த்தைகளால் சந்தோமான பவிஷ் அகர்வால் இந்த சம்பவத்தை அப்படியே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவும் செய்து விட்டார். Very Enterprising Guy எனக் குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு தற்போது இணைத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் பதிவு வைரலாகி வருவதால் பலரும் தங்கள் நிறுவன எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவார்கள் என்று எதிபார்த்திருக்கிறார்கள் அந்த நிறுவன அதிகாரிகள்.

எது எப்படியோ?... எலக்ட்ரிக் வாகனங்களால் நமது பர்சுக்கும், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு நிச்சயம். இந்த மனநிலையில் மக்கள் இருக்கும் போது பவிஷ் அகர்வாலின் ட்விட்டர் பதிவு கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றமில்லை. ஆனால்… விலையை நினைத்தால் கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது. அதை மட்டும் வாகன தயாரிப்பாளர்கள் கொஞ்சம் மனது வைத்தால் பலரும் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவார்கள்..

First published:

Tags: Trending Video, Viral Video