• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • ரிக்ஷகாரருக்கு ரூ.1 கோடி மதிப்பிலான சொத்தை கொடுத்த ஒடிசா பெண்மணி - காரணம் என்ன தெரியுமா?

ரிக்ஷகாரருக்கு ரூ.1 கோடி மதிப்பிலான சொத்தை கொடுத்த ஒடிசா பெண்மணி - காரணம் என்ன தெரியுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

மினாட்டி தனது கணவர் மற்றும் மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். ஆனால் அவர் வாழ்க்கையை புரட்டி போடும் அளவுக்கு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

  • Share this:
ஒடிசாவைச் சேர்ந்த வயதான பெண்மணி ஒருவர், தன் தாராள மனப்பான்மையாலும், அள்ளிக் கொடுக்கும் இயல்பாலும் தற்போது பல தலைமுறைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார். ஒடிசாவின் கட்டாக் நகரைச் சேர்ந்த பெண், ஒரு ரிக்ஷாக்காரனின் வாழ்க்கையை மாற்ற முடிவுசெய்து, தன் சொத்து முழுவதையும் அவருக்கு கொடுத்து, சாதாரண ரிக்ஷா ஓட்டினரை கோடீஸ்வரராகியுள்ளார்.

63 வயதான மினாட்டி பட்நாயக் என்பவர், கட்டாக்கைச் சேர்ந்த ஒரு ரிக்ஷாக்காரருக்கு தனது சொத்துக்கள் மற்றும் ரூ. 1 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் அனைத்தையும் நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளார். அவர் வழங்கிய சொத்தில் நகரத்தின் சுதாஹாட் பகுதியில் உள்ள மூன்று மாடி வீடு, தங்க ஆபரணங்கள் மற்றும் பிற சொத்துக்கள் அனைத்தும் அடங்கியுள்ளது.

மூதாட்டி தன் சொத்துக்களை புத்த சமல் என்ற ரிக்ஷாக்காரருக்கு வழங்கியுள்ளார். மினாட்டி
பட்நாயக் தனது முழு சொத்தையும் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வாழும் புத்தருக்கு நன்கொடையாக வழங்கியதன் காரணத்தைக் கேட்டால், நிச்சயம் நம் மனதை உருக வைக்கும்.

புத்தாவும் அவரது குடும்பத்தினரும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மினாட்டி மற்றும் அவரது உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களுக்கு சேவை செய்து வந்தனர். அவரது குடும்ப உறுப்பினர்கள் இறந்தபோது மினாட்டி மிகவும் உடைந்து போனார். அப்போது அவருக்கு ஆதரவு தந்த ஒரே தூண் புத்தாவும் அவரது குடும்பமும் மட்டுமே.

மினாட்டி தனது கணவர் மற்றும் மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். ஆனால் அவர் வாழ்க்கையை புரட்டி போடும் அளவுக்கு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து பேசிய மினாட்டி "என் கணவர் 2020ல் இறந்துவிட்டார். என் மகள் 2021ல் இறந்தார். அதன் பிறகு, இந்த சொத்துக்கள் அனைத்தும் எனக்கு எந்த வகையிலும் மதிப்பாக தெரியவில்லை" என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “நான் நொறுங்கி துயரத்தில் வாழ்ந்தபோது என் உறவினர்கள் யாரும் எனக்கு ஆதரவாக நிற்கவில்லை. நான் தனியாக இருந்தேன். ஆனால், இந்த ரிக்ஷாக்காரரும், அவருடைய குடும்பத்தினரும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என் உடல்நிலையைக் கவனித்துக் கொண்டிருந்தனர். மினாட்டியின் கணவர் மற்றும் மகள் இறந்த பிறகு, புத்தாவின் குடும்பம் மினாட்டியை பார்த்துக் கொள்வதில் முழுகவனம் செலுத்தினர்.

Also read... டிராஃபிக் ஜாமை தவிர்க்க நினைத்து வாகன ஓட்டி செய்த செயல் - வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்!

மினாட்டிக்கும் அவள் குடும்பத்துக்கும் சேவை செய்யும் போது, ​​இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று கொஞ்சம் கூட எண்ணிப்பார்க்கவில்லை என்று புத்தா தெரிவித்துள்ளார். அவர் தனது ரிக்ஷாவில் வேறு எந்த பயணிகளையும் ஏற்றிச் செல்வதில்லை என்றும், மினாட்டி மற்றும் அவரது குடும்பத்தினருக்காக எப்போதும் தனது சேவையை அர்ப்பணிப்பதாகவும் கூறினார். மினாட்டி உயிருடன் இருக்கும் வரை அவரை பார்த்துக் கொண்டே இருப்போம் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் பேசிய மினாட்டி "இப்போது, ​​என் மரணத்திற்குப் பிறகு யாரும் புத்தாவையும் அவரது குடும்பத்தினரையும் துன்புறுத்த மாட்டார்கள்" என்று கூறினார். இது போன்ற ஒரு மனிதநேயமிக்க செயல் இனி இந்த உலகில் நடக்குமா என்று தெரியாது. ஆனால், மினாட்டி மற்றும் அவரது குடும்பத்திற்கு விசுவாசமாக இருந்த புத்தாவின் வாழ்க்கையை மாற்ற நினைத்த அந்த எண்ணம் கடவுளுக்கு சமம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: