ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

நக வெட்டியை வைத்து பாம்பின் பல்லை பிடுங்கிய நபர்.. வீடியோவை வைத்து தேடிப்பிடித்த வனத்துறை!

நக வெட்டியை வைத்து பாம்பின் பல்லை பிடுங்கிய நபர்.. வீடியோவை வைத்து தேடிப்பிடித்த வனத்துறை!

பாம்பு

பாம்பு

வன உயிர்கள் வதைத் தடுப்பு சட்டத்தின் கீழ் நாகப்பாம்பை பிடிப்பது, அதை தொந்தரவு செய்வது, அதன் பற்களை பிடுங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Odisha (Orissa) |

  உலகின் மிக நீளமான விஷப் பாம்பு நாகப்பாம்பின் கோரைப் பற்களை நகம் வெட்டும் கருவியால் பிடிங்கி எடுத்த ஒருவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

  உலகில் உள்ள பாம்புகளில் அதிக  விஷம் கொண்ட பாம்புகளில் ஒன்று இந்திய ராஜ நாகம். வன உயிர்கள் வதைத் தடுப்பு சட்டத்தின் கீழ் நாகப்பாம்பை பிடிப்பது, அதை தொந்தரவு செய்வது, அதன் பற்களை பிடுங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

  ஒடிசா மாநிலத்தின் பாலங்கிர் மாவட்டத்தின் பிலேசர்தா கிராமத்தைச் சேர்ந்தவர் அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து ஒரு நாகப்பாம்பை பிடித்து வந்துள்ளார், பிடித்ததோடு நாகப்பாம்பின் வாயை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, நகவெட்டியைப் பயன்படுத்தி அதன் கோரைப் பற்களைப் பிடிங்கி அதன் விஷத்தை எடுத்துள்ளார்.

  இதையும் படிங்க: 100 அழைப்பிதழ்கள்.. மெஹந்தி விழா.. கோலாகலமாக நடந்த செல்ல நாய்களில் திருமணம்!

  பாம்பு முறுக்கிக் கொண்டு தன்னை விடுவித்துக் கொள்ள முயன்று முடியாமல் துடித்துள்ளது. இதை அந்த கிராமத்தின் மக்கள் சிலர் நேரில் பார்த்துள்ளனர். அது மட்டுமின்றி அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சில மணி நேரத்தில் வைரலாக பரவியுள்ளது.

  அந்த பதிவை பார்த்துவிட்டு அருகில் இருந்த வனத்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். ஒடிசாவில் பிலேசர்தா பகுதியில் இருந்து நாகப்பாம்பு பிடிக்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

  பாம்பின் பற்களை அகற்றிய குற்றச்சாட்டின் பேரில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் வீர பிஸ்வால் என அடையாளம் காணப்பட்டார்.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Arrested, Odisha, Snake