Home /News /trend /

நாட்டையே திரும்பி பார்க்க வைத்த விவசாயி... உலகின் மிக உயர்ந்த மாம்பழ வகை விளைச்சல்

நாட்டையே திரும்பி பார்க்க வைத்த விவசாயி... உலகின் மிக உயர்ந்த மாம்பழ வகை விளைச்சல்

(Credits: News18)

(Credits: News18)

Miyazaki Mango | வங்கதேசத்தில் இருந்து இந்த மாமரச் செடியை 3 ஆண்டுகளுக்கு முன்பாக கொண்டு வந்து அவர் நடவு செய்தார்.

தமிழர்களின் முக்கனிகளில் ஒன்று மாம்பழம். கோடைப் பருவ பழமாக கிடைக்கும் மாம்பழங்களை நினைத்து விட்டாலே நாவில் எச்சில் சுரக்கும். தமிழகம் உள்பட இந்தியா மட்டுமல்லாமல், உலகெங்கிலும் மாம்பழங்களுக்கு பெரும் வரவேற்பு உண்டு. நம்மைப் பொருத்தவரையில் பெரும்பாலும் சுவையுள்ள மாம்பழங்களை அதிகம் விரும்பி வாங்குகிறோம். அதே சமயம், குறிப்பிட்ட சில ரகங்களில் மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கின்றன அல்லது அந்த ரகம் மிக அரிதான ஒன்று என்ற வகையில் மாம்பழங்கள் விலை உயர்ந்த பொருளாகவும் இருக்கிறது.

அந்த வகையில், ஜப்பானை பூர்வீகமாகக் கொண்ட மியாஸாகி மாம்பழ ரகம் உலக அளவில் பிரபலமானது ஆகும். நாம் வழக்கமாக பார்க்கும் மாம்பழங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆனால், இந்த மியாஸாகி மாம்பழங்கள் ரூபி சிவப்பு நிறத்தில் இருக்கும். உலகின் மிக விலை உயர்ந்த மாம்பழ ரகமாக இது இருக்கிறது.

கிலோ ரூ.3 லட்சம்

ஒரு கிலோ மியாஸாகி மாம்பழம் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையில் விற்பனை ஆகிறது. ஓடிஸா மாநிலம், பர்கார் மாவட்டத்தின் நிலாதர் கிராமத்தைச் சேர்ந்த, 50 வயதான சந்துரு சத்ய நாராயணன் என்ற விவசாயி, அவரது தோட்டத்தில் இந்த மாமரத்தை வளர்த்து வருகிறார். அடிப்படை கல்வி கூட படிக்காத இந்த விவசாயில், அரிய வகை மாமரத்தை வெற்றிகரமாக வளர்த்து எடுத்ததன் மூலமாக மிக பிரபலம் ஆகிவிட்டார்.

இதுகுறித்து சத்ய நாராயணா கூறுகையில், “நான் இந்த மாங்கன்றை வங்கதேசத்தில் இருந்து வாங்கி வந்தேன். என்னால் இந்த மரத்தை இங்கு வளர்க்க முடிந்திருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாம்பழங்களை சந்தைப்படுத்த உதவ வேண்டும் என்று மாநில அரசை கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார் அவர்.



வறட்சியான நிலத்தில் வளர்த்து சாதனை

சத்ய நாராயணா குடியிருக்கும் பர்கார் மாவட்டம் வறட்சியான பகுதியாகும். இதுகுறித்து, வேளாண் துறை உதவி இயக்குநர் வாசுதேவ் பிரதான் கூறுகையில், “இது வறட்சி பாதிக்கப்பட்ட பகுதி என்றாலும் கூட, சத்ய நாராயணா இந்த மாம்பழத்தை வெற்றிகரமாக விளைவித்துள்ளார். உலகின் விலை உயர்ந்த மாம்பழத்தை ஒடிஸாவிலும் விளைவிக்க முடியும் என்பது எங்களுக்கு பெருமைக்குரிய விஷயம் ஆகும்’’ என்று கூறினார்.

Also Read : 5 நாட்களுக்கு மட்டும் இந்த வேலையை பாத்தா போதும், ஐந்து லட்சம் சம்பளமாம்!

3 ஆண்டுகளில் மகசூல்

பர்கார் மாவட்டத் தலைநகரில் இருந்து 130 கி.மீ. தொலைவில் சத்ய நாராயணாவின் கிராமம் அமைந்துள்ளது. வங்கதேசத்தில் இருந்து இந்த மாமரச் செடியை 3 ஆண்டுகளுக்கு முன்பாக கொண்டு வந்து அவர் நடவு செய்தார். தற்போது வெற்றிகரமான மகசூல் கிடைத்துள்ள நிலையில், மியாஸாகி மாம்பழங்களை சந்தைப்படுத்துவதற்கான அனைத்து உதவிகளையும் ஒடிஸா மாநில வேளாண் துறை செய்யும் என்று கோவிந்த் பிரதான் தெரிவித்தார்.

Also Read : திருமண மேடையில் ஒருவரை ஒருவர் சராமாரியாக அறைந்து கொண்ட மணமக்கள் - வைரல் வீடியோ

கர்நாடக அரசு மாம்பழ விற்பனை

இந்தியர்கள் பல ரக மாம்பழங்களை விரும்பி உண்ணும் பழக்கம் உடையவர்கள். அவர்களது ஆசையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையை கர்நாடக மாநில அரசு மேற்கொண்டுள்ளது. ஆன்லைன் மாம்பழ விற்பனை இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறையின் உதவியுடன் இந்த சேவை நடைபெற்று வருகிறது. கடந்த 16ஆம் தேதி தொடங்கிய இந்த விற்பனை ஆகஸ்ட் மாதம் வரையிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Mango, Odisha, Trending

அடுத்த செய்தி