Home /News /trend /

குடும்ப உறுப்பினர் போல் வளர்ப்பு நாய்க்கு கண்ணீர் மல்க இறுதி ஊர்வலம் நடத்திய குடும்பம்

குடும்ப உறுப்பினர் போல் வளர்ப்பு நாய்க்கு கண்ணீர் மல்க இறுதி ஊர்வலம் நடத்திய குடும்பம்

வளர்ப்பு நாய்க்கு கண்ணீர் மல்க இறுதி ஊர்வலம்

வளர்ப்பு நாய்க்கு கண்ணீர் மல்க இறுதி ஊர்வலம்

Funeral of Pet Dog | இறுதி ஊர்வலம் துவங்கியவுடன் மேளம் மற்றும் பிற பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் வானவேடிக்கை மற்றும் பட்டாசுகளின் ஒலிகளால் முழு வட்டாரமும் அதிர்ந்துள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நாம் வளர்க்கும் செல்ல பிராணிகளிலேயே மிகவும் நம்பிக்கைக்குரியவை மற்றும் விசுவாசமானவை நாய்கள் தான். மனிதர்களுடன் பாசமாக பின்னி பிணையும் தன்மை கொண்ட நாய்கள் மனிதர்களுக்கு உற்ற தோழனாக மற்றும் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே பல வீடுகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன.

    நாய்களை வீட்டில் வளர்ப்பது மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வை குறைக்க உதவுவதோடு தனிமை உணர்வை போக்கி குதூகலமாக்குகிறது. அவற்றுடன் விளையாடும் போது குழந்தைகளுடன் விளையாடுவது போன்றே நமக்கு குதூகலம் ஏற்படும். இப்படிப்பட்ட செல்ல பிராணியான நாயை இழப்பது என்பது அதை வளர்க்கும் பலருக்கும் அவ்வளவு எளிதில் கடந்து செல்ல கூடிய விஷயமாக இருக்காது.

    ஒடிசா மாநிலத்தின் கஜபதி (Gajapati) மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பம் தாங்கள் ஆசை ஆசையாய் வளர்த்த செல்ல நாய்க்கு கண்ணீர் மல்க பிரியாவிடை வழங்கி உள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ செய்து உள்ளது. ஒரு குடும்ப உறுப்பினர் இறந்தால் எப்படி இறுதி ஊர்வலம் நடக்குமோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் தங்களது செல்ல நாயின் இறுதி ஊர்வலத்தை நடத்தி உள்ளனர் குறிப்பிட்ட குடும்பத்தினர்.

    இறந்த செல்ல நாயின் பெயர் அஞ்சலி, இதனை பாசமாக வளர்த்த உரிமையாளரின் பெயர் துனு கவுடா. தங்கள் வீட்டில் சுமார் 16 ஆண்டு காலம் அஞ்சலி வளர்ந்ததாகவும், காலப்போக்கில் பல நாய்களை தத்தெடுத்து வளர்த்தாலும் அஞ்சலி தனக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வந்ததாவும் துனு கவுடா (Tunu Gouda) குறிப்பிட்டு உள்ளார். அஞ்சலி என்னிடம் வந்த பிறகு தான் எனது பொருளாதார நிலை மேம்பட்டு சொந்தமாக வீடு கட்ட முடிந்தது என்று கனத்த இதயத்துடன் கூறினார்.

    Also Read : திருநங்கை, திருநம்பி தம்பதிக்குப் பிறந்த ஆண் குழந்தை - வியப்பில் மக்கள்... பதில் இதோ!

    சுமார் 16 வருடங்கள் துனு கவுடா மற்றும் அவரது குடும்பத்திற்கு சேவை செய்த அஞ்சலி சமீபத்தில் (ஆகஸ்ட் 8) காலை 7 மணியளவில் தனது மூச்சை நிறுத்தியது. கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியவில்லை.



    வீட்டில் செல்லப்பிள்ளையாக வளர்த்து வந்த அஞ்சலி இறந்ததை அடுத்து கவுடாவும் அவரது குடும்பத்தினரும் கண்ணீர் விட்டு கதறி சோகத்தில் மூழ்கினர். இதனை தொடர்ந்து அஞ்சலியின் இறுதி ஊர்வலம் மற்றும் அதற்கு இறுதி சடங்கு செய்வதற்கான பணிகளில் இறங்கினர். அஞ்சலியின் இறுதி ஊர்வலத்திற்காக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சவ ஊர்தி வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்திற்காக வீட்டை விட்டு வெளியே அழைத்து செல்லும் முன்பு, குடும்பத்தினர் இறந்த அஞ்சலிக்கு மஞ்சள் நீரில் குளிப்பாட்டி மாலை அணிவித்தனர்.

    இறுதி ஊர்வலம் துவங்கியவுடன் மேளம் மற்றும் பிற பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் வானவேடிக்கை மற்றும் பட்டாசுகளின் ஒலிகளால் முழு வட்டாரமும் அதிர்ந்துள்ளது. மேள தாளங்கள் மற்றும் மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடைபெற்ற அஞ்சலியின் இறுதி ஊர்வத்தில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பின் பாரம்பரிய சடங்குகளின்படி செல்ல நாயின் இறுதி சடங்குகளை (இந்து முறைப்படி) செய்த துனு கவுடா, மரபுப்படி மற்ற மரணத்திற்குப் பிந்தைய சடங்குகளும் செய்யப்படும் என்று கண்ணீர் மல்க கூறி இருக்கிறார். அஞ்சலியின் இறுதி ஊர்வலம் தொடர்பான வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி விலங்குநல ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி