உலகின் மிகச்சிறிய ராமர் சிலையை உருவாக்கிய ஒடிசா கலைஞர் - ராமநவமியை வீட்டிலேயே கொண்டாட வேண்டுகோள்!

உலகின் மிகச்சிறிய ராமர் சிலையை உருவாக்கிய ஒடிசா கலைஞர் - ராமநவமியை வீட்டிலேயே கொண்டாட வேண்டுகோள்!

உலகின் மிகச்சிறிய ராமர் சிலையை உருவாக்கிய ஒடிசா கலைஞர்

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர் சத்தியநாராயண மஹாராணா என்பவர் வடிவமைத்துள்ள இந்த சிலையின் உயரம் 4.1 சென்டிமீட்டர் மட்டுமே.

  • News18
  • Last Updated :
  • Share this:
ராம நவாமியின் புனித சந்தர்ப்பத்தை குறிக்கும் வகையில், ஒடிசாவைச் சேர்ந்த ஒரு கலைஞர் ஒருவர் உலகின் மிகச்சிறிய ராமர் சிலையை உருவாக்கியுள்ளார். ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர் சத்தியநாராயண மஹாராணா என்பவர் வடிவமைத்துள்ள இந்த சிலையின் உயரம் 4.1 சென்டிமீட்டர் மட்டுமே. மேலும் இந்த சிலையை செய்து முடிக்க ஒரு மணிநேரம் ஆனது என்று சத்தியநாராயணன் கூறினார்.

ஆண் தெய்வங்கள் மற்றும் பெண் தெய்வங்களின் சிறிய மற்றும் தனித்துவமான வடிவ சிலைகளை உருவாக்குவதில் மஹாராணா கைதேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில் ராம் நவாமி விழாவின் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அவர் சிறிய ராமர் சிலையை வடிவமைக்க முடிவு செய்தார். இது குறித்து செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ-யிடம் பேசிய மஹாராணா, அனைவருக்கும் இனிய ராம் நவாமி வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். கொரோனா பரவலை தடுக்க மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருங்கள். வீட்டிலேயே வழிபாடு செய்யுங்கள். வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம்" என்று கூறியுள்ளார். மேலும் ராமர் சிலையை உருவாக்க தனக்கு ஒரு மணிநேரம் மட்டுமே ஆனது என்று செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.4.1 சென்டிமீட்டர் உயரத்தில் நிற்கும் இந்த கலைஞரின் படைப்பு ட்விட்டர் யூசர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. மஹாராணா தனது மினியேச்சர் சிலை மூலம் பொதுமக்களுக்கு ஒரு செய்தியையும் பகிர்ந்து கொண்டார். ராம நவமியை முன்னிட்டு பகவான் ராமரை வணங்க மக்கள் தயவுக்கூர்ந்து வெளியே வரவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலாக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்தபடியே பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு முன்னதாக மஹாராணா, சிவராத்திரி தினத்தன்று, சிவபெருமானின் சிலைகளை மரத்தாலும் கல்லாலும் செதுக்கியுள்ளார். மேலும் வழிபாட்டைக் குறிக்கும் விதமாக சிறிய சிவலிங்கங்களையும் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

Also read... 93 ஆண்டுகள் பழமையான சரவிளக்கு சட்டத்தை மணமுடிக்க விரும்பும் பெண்: இங்கிலாந்தில் வினோதம்!

சைத்ரா கொண்டாட்டம் முக்கியமாக ஏப்ரல் மாதத்தில் வட மாநிலங்களில் நடைபெறுகிறது. சைத்ரா நவராத்திரியின் ஒன்பதாம் மற்றும் கடைசி நாளில் ராம் நவமி கொண்டாடப்படுகிறது. சைத்ரா நவராத்திரி அன்னை துர்காவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது சந்திர நாட்காட்டியின்படி இந்து புத்தாண்டின் முதல் நாளில் தொடங்கி ராம நவமியுடன் முடிவடைகிறது. மேலும், சித்திரை மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய நவமி திதியில் ஸ்ரீ ராமன் அவதரித்தார். சில இடங்களில் சித்திரை வளர்பிறை தொடங்கி நவமி திதி வரை சித்திரை நவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று (ஏப்ரல் 21) நாடு முழுவதும் ராம நவமி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ராம் நவமி ஏப்ரல் 21ம் தேதி புதன்கிழமை அதிகாலை 12:43 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 22 ஆம் தேதி அதிகாலை 12:35 மணிக்கு நிறைவடையும். இந்து புராணங்களின்படி, விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாக ராமர் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: