ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

படகில் இருந்து தப்பித்து கடலில் சேர வழியை கண்டுபிடித்த ஆக்டோபஸ் - வைரலாகும் வீடியோ

படகில் இருந்து தப்பித்து கடலில் சேர வழியை கண்டுபிடித்த ஆக்டோபஸ் - வைரலாகும் வீடியோ

ஆக்டோபஸ்

ஆக்டோபஸ்

Viral Video : தான் வந்த வழிக்கு மீண்டும் சென்று சேர படகில் இருந்து தப்பித்துச் செல்லும் ஆக்டோபஸ் வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஆக்டோபஸ் ஒன்று சிறிய படகில் இருந்து தப்பித்து கடலுக்குள் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பேய்க்கணவாய் என்பது ஆங்கிலத்தில் ஆக்டோபஸ் என அழைக்கப்படுகின்றது. பேய்க்கணவாயின் உடலில் எலும்பு இல்லாததால், மிகச் சிறிய இடுக்குகளிலும் அவற்றால் நுழைந்து வெளிவர இயலும். இவை பொதுவாக 5 செ.மீ முதல் 5 மீ வரையான அளவுகளில் உண்டு. பேய்க்கணவாய்க்கு மூன்று இதயங்கள் உண்டு. இதன் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

தற்போது இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா பேய்க்கணவாய் ஒன்றின் வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேய்க்கணவாய் ஒன்று படகின் வழியே உள்ள சிறிய ஓட்டையில் இருந்து தப்பித்து கடலில் குதித்து தான் எங்கிருந்து வந்ததோ அங்கேயே சென்று விடுகின்றது.

இந்த வீடியோவின் தலைப்பில் இவ்வளவு பெரிய ஆக்டோபஸ் மீன்பிடி படகில் இருந்து எப்படி சிறிய ஓட்டை வழியாக தப்பிக்கிறது என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Viral Video