உணவு சார்ந்த பல அற்புதமான, ஆச்சரியமான செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளன. சுவையான உணவு, பழங்காலத்து உணவு முதல் உலகின் அதிக விலையுள்ள உணவு வரை பல விதமான உணவுகள் தலைப்பு செய்தியில் இடம் பெறும். அந்த வரிசையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடும் ஃபிரெஞ்ச் ஃபிரைஸ், தள்ளு வண்டிக்கடை முதல் 5 ஸ்டார் ரெஸ்டாரன்ட் வரை விற்கப்படுகிறது. பல நாடுகளில் பிரதான உணவாக இருக்கும் உருளைக்கிழங்கு, விரல் நீள பொன்னிற வறுவலாக குறைந்த விலையில் தான் விற்பனை செய்யப்படுகின்றது. ஆனால், நியூயார்க்கில் உள்ள ஒரு உணவகத்தில் விற்கப்படும் ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் விலையைக் கேட்டால் மயங்கி விழுவீர்கள். ஒரு தட்டு ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் விலை, ஜஸ்ட் ரூ.15,800!
உலகின் மிகவும் காஸ்ட்லியான சிட்டிகளில் ஒன்றான நியூயார்க் நகரத்தில் செரிண்டிபிட்டி என்ற உணவகத்தில் ஒரு பிளேட் ஃபிரெஞ்ச் ஃபிரைசின் விலை $200. உலகிலேயே மிகவும் விலை அதிகமான ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் என்று இந்த உணவகத்தின் ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
விலை உயர்ந்த ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் தயாரிப்பில் அப்படி என்ன விலை மதிப்புள்ள பொருட்கள் சேர்க்கப்படுகிறது என்ற கேள்வி எழலாம்! இங்கு தயார் செய்யப்படும் ஃபிரெஞ்ச் ஃபிரைஸுக்கு மிக மிக விலை உயர்ந்த மற்றும் விலை அதிகமான, ஸ்பெஷல் உணவுப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. உயர்தரமான உருளைக்கிழங்கு, விண்டேஜ் 2006 சாம்பெயின், ஹீலி பிளான்க் ஃபிரென்ச் சாம்பெயின் வினிகர், டிரஃப்பிள் சால்ட், டிரஃப்பிள் எண்ணெய், சிறப்பு சீஸ் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றுடன், 23 கேரட் எடிபில் தங்கப் பொடி ஆகிய தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை கொண்டு தயாரிக்கிறது.
உலக கின்னஸ் புத்தகம் தங்களது அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உலகின் விலை அதிகமான பிரெஞ்ச் பிரைஸ், $200 dollars - Creme de la Crème Pommes Frites by Serendipity 3 என்று ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவை இதுவரை கிட்டத்தட்ட 4,50,000 பேர் பார்த்துள்ளார்கள் மற்றும் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர்.
View this post on Instagram
இந்த விலை அதிகமான ஃபிரெஞ்ச் ஃபிரைசின் கிரீம் டெலா கிரீம் பொம்மஸ் ஃபிரைட்ஸ் என்பதாகும். இதன் விலையைப் பற்றி உலக சாதனை கின்னஸ் புத்தகம் கேள்விப்பட்டவுடன் ஆச்சரியப்பட்டு போனார்கள் என்று உணவகம் தரப்பில் கூறினர். உடனடியாக இதை ஆய்வு செய்து உலகிலேயே இதுதான் மிகவும் விலை அதிகமான ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் என்று அறிவித்தனர். அமெரிக்காவில் தேசிய ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் தினமான ஜூலை 13 ஆம் தேதி அன்று செரண்டிபிட்டி உணவகத்தில் இந்த விலை அதிகமான ஃபிரென்ச் ஃபிரைஸ் உணவுப் பட்டியலில் சேர்க்கப்பட இருக்கிறது.
Also Read : போட்டிக்கு நீங்களும் வரலாம்..! 8 கிலோ சமோசாவை 30 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.51,000 பரிசு
அது மட்டுமல்லாமல் உலகிலேயே மிகவும் விலை அதிகமுள்ள டெசர்ட்டையும் இந்த உணவகம் தான் விற்பனை செய்கிறது. இனிப்பின் விலை இருபத்தைந்தாயிரம் டாலர். இதன் விலைக்காக தான் இந்த டெசர்ட் உணவு பிரபலமாக இருக்கிறதே தவிர சுவைக்காக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.