அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது பெண் நிருபர் ஒருவர் இந்திய நிருபரை கேலி செய்து தனது முக பாவனைகளை மாற்றிக்கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
பிப்ரவரி 26 அன்று வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் கொரோனா வைரஸ் குறித்த மாநாட்டில் அதிபர் டொனால்ட் டிரம்ப் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இந்திய நிருபர் ஒருவர் அதிபர் ட்ரம்ப்-டம் இந்தியா-அமெரிக்க உறவுகள் குறித்து கேள்வி எழுப்புகின்றார்.
நிருபர் கேள்வி கேட்கும்போது, அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர், கேலி செய்வது போன்று தனது முக பாவனைகளை மாற்றுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Who is that reporter in the green mocking an Indian reporter? I bet she thinks Trump is racist. pic.twitter.com/YtGv32XOUe
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.