மாஸ்க் ஏற்படுத்தும் காயங்கள்: அன்பினால் எழுகிறது சீன சமூகம்

மாஸ்க் ஏற்படுத்தும் காயங்கள்: அன்பினால் எழுகிறது சீன சமூகம்
மாஸ்க் வடுக்களுடன் சீன செவிலியர்கள்
  • Share this:
கொடிய ’கொரோனா வைரஸ்’பாதிப்பால் அவதியுறும் மக்களை இரவு பகல் பாராமல் கவனிக்கும் சீன செவிலியர்களைக் கொண்டாடுகிறது இணைய சமூகம்.

சீன மக்களையும், உலகின் மற்ற சில பகுதிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது ’கொரோனா வைரஸ்’.இந்நிலையில், கொடிய ’கொரோனா வைரஸ்’பாதிப்பால் அவதியுறும் மக்களை இரவு பகல் பாராமல் கவனிக்கும் சீன செவிலியர்களை கொண்டாடுகிறது இணைய சமூகம். சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ள செவிலியர்களின் புகைப்படங்களை பலரும் நன்றியுடன் போற்றி பகிர்ந்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து சீன மருத்துவரான லீ வென் லியாங் (Li Wen liang) 2019 டிசம்பர் மாதம் எச்சரித்திருந்தார். சீன அரசாங்கம் போலீஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளைக் கொண்டு மருத்துவர்களை மௌனமாக்கியது. ஜனவரி மாதத்தில் இந்த நோய் பரவல் வேகமெடுக்கத் தொடங்கியது. வைரஸ் காய்ச்சலின் தீவிரத்தை சீன அரசு உணர்ந்துகொண்ட நேரத்தில், கொரோனா பல உயிர்ப்பலிகளை எடுத்துக்கொண்டது. ஜனவரி 31-ம் தேதி, உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் தாக்கத்தை ‘சர்வதேச மருத்துவ அவசரநிலை’என அறிவித்தது.


சில நாட்களுக்கு முன்பாக மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் தன் தாய்க்கு 9 வயது மகளான செங் ஷிவென் உணவு கொடுத்து, காற்றில் அணைப்பை வெளிப்படுத்திய வீடியோ இணையத்தில் வெளியானது. தற்போது, மாஸ்க் அணிந்த செவிலியர்களின் புகைப்படங்களை சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. பகலிரவு பார்க்காமல் மருத்துவ சேவைகள் செய்யும் செவிலியர்களின் தியாகத்தைக் கொண்டாடுகிறது சர்வதேச சமூகம்.

முகமூடிகளால் உண்டான காயங்களுக்கு மருந்திட்டு, மீண்டும் மாஸ்க் அணிந்து மருத்து சேவையைத் தொடர்கிறார்கள் செவிலியர்கள். அச்சத்தில் தினம் தினம் வாழ்ந்தாலும், அன்பின் வழியாக எழுந்துநிற்கிறது சீன சமூகம்.

Also See...
First published: February 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்