Home /News /trend /

சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடி நோயாளியை உற்சாகப்படுத்திய நர்சுகள்... வைரலாகும் வீடியோ

சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடி நோயாளியை உற்சாகப்படுத்திய நர்சுகள்... வைரலாகும் வீடியோ

Nurse Dance in Hospital | நர்சுகளின் முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்து அவர் தற்போது ஓரளவு உடல்நிலை தேறி இருக்கிறார்.

Nurse Dance in Hospital | நர்சுகளின் முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்து அவர் தற்போது ஓரளவு உடல்நிலை தேறி இருக்கிறார்.

Nurse Dance in Hospital | நர்சுகளின் முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்து அவர் தற்போது ஓரளவு உடல்நிலை தேறி இருக்கிறார்.

    தனியார் மருத்துவமனையில் நோயாளியை குணப்படுத்தும் முயற்சியாக சினிமா பாட்டுக்கு செவிலியர்கள் டான்ஸ்  ஆடி உற்சாகப்படுத்தினர். இதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது.

    தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள சுல்தானாபாத் கிராமத்தை சேர்ந்த சீனிவாஸ் என்பவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு உரிய பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கரீம்நகரில் உள்ள மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை உறவினர்கள் கடந்த 25 நாட்களுக்கு முன் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அவருடைய மனநிலையில் உற்சாகத்தை ஏற்படுத்தி நோயிலிருந்து அவரை மீட்கும் முயற்சியில் மருத்துவமனை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதற்காக மருத்துவமனையில் பணியாற்றும் நர்சுகள் சீனிவாஸ் முன் சினிமா பாட்டுக்கு ஏற்றவாறு தினமும் நடனமாடி அவரை உற்சாகப் படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.



    நர்சுகளின் முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்து அவர் தற்போது ஓரளவு உடல்நிலை தேறி இருக்கிறார். எனவே அவரை அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றி அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இதையும் படிங்க - 'ஆணவத்தில் ஆடுகிறது பாஜக; ஆம் ஆத்மிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்...' : குஜராத்தில் கெஜ்ரிவால் பேச்சு

    இதன்மூலம் நோயாளியை மனோரீதியாக உற்சாகப்படுத்தினால் அவருக்கு கொடுக்கும் மருந்துகள் கூட விரைவாக வேலை செய்யும் என்பது தெளிவாகி உள்ளது. இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

    செய்தியாளர் : புஷ்பராஜ்
    Published by:Musthak
    First published:

    Tags: Telangana

    அடுத்த செய்தி