Home /News /trend /

பெருமளவு பயிர் இழப்பை ஏற்படுத்தும் விகிதத்தில் உலகம் வெப்பமடைந்து வருகிறது - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

பெருமளவு பயிர் இழப்பை ஏற்படுத்தும் விகிதத்தில் உலகம் வெப்பமடைந்து வருகிறது - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

மாதிரி படம்

மாதிரி படம்

பயிர் விளைச்சலை எவ்வாறு பாதிக்கும் என்பதில் பெரும்பாலான விவசாய விஞ்ஞானிகள் கவனம் செலுத்துகின்றனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
வளிமண்டல கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிப்பது பயிர் விளைச்சலை எவ்வாறு பாதிக்கும் என்பதில் பெரும்பாலான விவசாய விஞ்ஞானிகள் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் உயரும் வெப்பநிலை மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்டவையும் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை மற்றும் வளர்ச்சியை பாதிக்கும் என்பது புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

வெப்பநிலை அதிகரிப்பது காலநிலை மாற்ற நிலைகளையும் இறுதியில் பயிர் விளைச்சலையும் பாதிக்க கூடுதல் காரணமாக இருக்கிறது என்று வேளாண் விஞ்ஞானிகள் குழுவின் சமீபத்திய ஆய்வு முடிவு கூறுகிறது. இது தொடர்பாக கெய்ட்லின் மூர், கார்ல் பெர்னாச்சி, கேத்ரின் ஹென்சோல்ட் மற்றும் அவர்களது சகாக்கள் தி ஜர்னல் ஆஃப் எக்ஸ்பரிமென்டல் பாட்டனி பத்திரிகையில் ஒரு கட்டுரையை சமர்ப்பித்தனர். இது வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக பயிர்களில் ஏற்படும் தாக்கங்களை எடுத்து காட்டுவதாக உள்ளது. இவர்களின் ஆய்வானது சிறந்த தாவர வளர்ச்சிக்கு பயிர் மீதான வெப்பத்தின் தாக்கத்தை எவ்வாறு குறைப்பது என்பதில் முக்கிய கவனம் செலுத்தியுள்ளது.

ஒளிச்சேர்க்கையின் முக்கிய அங்கமான கார்பன் டை ஆக்சைடு(CO2) கிடைத்தாலும் அதிக வெப்பநிலையானது தாவர வளர்ச்சியை பாதிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒளிச்சேர்க்கையை இயக்கும் என்சைம்கள் கார்பன் டை ஆக்சைடு மற்றும் உயர் வெப்பநிலை காரணமாக நீரிழப்பை கட்டுப்படுத்துவதில் தடையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஒளிச்சேர்க்கை என்பது பச்சை தாவரங்களும், பிற உயிரினங்களும் ஒளி ஆற்றலை வேதியியல் சக்தியாக மாற்றும் செயல்முறையை குறிக்கிறது. பச்சை தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின் போது, ஒளி ஆற்றல் கைப்பற்றப்பட்டு நீர், கார்பன் டை ஆக்சைடு மற்றும் தாதுக்களை ஆக்ஸிஜன் மற்றும் ஆற்றல் நிறைந்த கரிம சேர்மங்களாக மாற்ற பயன்படுகிறது.

மேலும் அந்த ஆய்வில் தெரிய வந்திருப்பதாவது: காலநிலை மாற்றங்களுடன் தொடர்புடைய உயர் வெப்ப நிலையானது கட்டமைத்தல், நீர் வைத்திருத்தல், கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுதல் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றை தக்க வைத்து கொள்ளும் பயிர்கள் மற்றும் தாவரங்களின் திறனை தடுக்கின்றது. மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான கெய்ட்லின் மூர், இந்த பிரச்சனைக்கு தெளிவான புரிதல் தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.

Also read... கொரோனாவை போல பேரழிவை ஏற்படுத்தும் ’சூப்பர்பக்’ - அந்தமான் தீவில் கண்டுபிடிப்பு!

வெப்பநிலை அளவு உயருவதால் தாவரங்கள் எவ்வாறு திறந்த துளைகளை விட்டு வெளியேறுகின்றன என்பதை ஆராய்ச்சி குறிப்பிடுகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் CO2 மற்றும் தாவரங்களில் அது ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தாவர உயிரியல் மற்றும் பயிர் அறிவியல் பேராசிரியரும், கார்ல் ஆர். வோஸ் இன்ஸ்டிடியூட் ஃபார் ஜெனோமிக் நிறுவனத்தின் இணை ஆசிரியருமான கார்ல் பெர்னாச்சி கூறி உள்ளார்.

பயிர் இழப்பை பெருமளவில் ஏற்படுத்தும் அதிர்ச்சியூட்டும் விகிதத்தில் உலகம் வெப்பமடைந்து வருவதாகவும், இந்த சிக்கலை புறக்கணிக்க முடியாது என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மொத்த வெப்பநிலை டிகிரி செல்சியஸின் ஒவ்வொரு அதிகரிப்பும், நமது நான்கு முக்கிய பயிர்களின் விளைச்சல்களில் 3% முதல் 7% வரை இழப்பை ஏற்படுத்தும். எனவே இதை நாம் சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. இதனிடையே தாவர ஒளிச்சேர்க்கையின் முக்கிய பிரச்சனைகளை தீர்க்க, ரூபிஸ்கோ செயல்திறன் மேம்பாடு, ஒளி சேகரிக்கும் பண்புகளில் மாற்றம் , சிறந்த CO2 வருகைக்கான ஸ்டோமாடாவின் அடர்த்தியைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்டவற்றை ஆராய்ச்சியாளர்கள் உத்திகளாக பயன்படுத்தி வருகின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Climate change

அடுத்த செய்தி