ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

வறண்ட பூமி.. வான் நெருப்பு.. 2023ல் இதெல்லாம் நடக்குமா? கலங்கவைக்கும் நோஸ்ட்ராடாமஸ் கணிப்புகள்!

வறண்ட பூமி.. வான் நெருப்பு.. 2023ல் இதெல்லாம் நடக்குமா? கலங்கவைக்கும் நோஸ்ட்ராடாமஸ் கணிப்புகள்!

நோஸ்ட்ராடாமஸ் கணிப்புகள் என்னவாக இருக்கலாம்

நோஸ்ட்ராடாமஸ் கணிப்புகள் என்னவாக இருக்கலாம்

வருங்கால நிகழ்வுகள் , போர்கள், பேரழிவுகள் பற்றிய தனது யுகங்களை 1555 ஆம் ஆண்டு தனது புகழ்பெற்ற புத்தகமான "லெஸ் ப்ரோபிடீஸ்" இல் தொகுத்து  வெளியிட்டார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • chennai |

சாதாரண நாட்களிலேயே மக்கள் ராசி பலன் பார்த்து இன்று நாள் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொண்டு தான் நாட்களை தொடங்குவார்கள். புதிய ஆண்டு வேறு தொடங்கிவிட்டது... சொல்லவா வேணும்.. எதிர்காலத்தை கணித்து எழுதி வாய்த்த சிலரது புத்தகங்களை எல்லாம் புரட்டி எடுத்து தேடுகின்றனர்.

அப்படி பிரெஞ்சு நாட்டை சேர்ந்த  நோஸ்ட்ராடாமஸ் கணிப்புகள் தான் இப்போது எல்லார் கண்களையும் காதுகளையும் தன்பக்கம் ஈர்த்து வருகிறது. நோஸ்ட்ராடாமஸ் பெயர் ஒன்றும் மக்களுக்கு புதிதல்ல..கடந்த 25 ஆண்டுகளாகவே இவரது பெயர் அவ்வப்போது ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது. நோஸ்ட்ராடாமஸ் என்று பொதுவாக அறியப்படும் Michel de Nostredame, 400 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர். வருங்கால நிகழ்வுகள் , போர்கள், பேரழிவுகள் பற்றிய தனது யுகங்களை 1555 ஆம் ஆண்டு தனது புகழ்பெற்ற புத்தகமான "லெஸ் ப்ரோபிடீஸ்" இல் தொகுத்து  வெளியிட்டார்.

அவருடைய சமகாலத்தவர்களால்  மதிக்கப்படாவிட்டாலும், காலம் நமக்காக  காத்திருக்கிறது என்ற அவரது கணிப்புகளுக்கு பலர் தற்போது ரசிகர்களாகியுள்ளனர்.நெப்போலியனின் எழுச்சி, ஜான் எஃப். கென்னடியின் படுகொலை மற்றும் 9/11  சம்பவம் போன்றவற்றை அவர் சரியாக கணித்ததாக கூறப்படுகிறது.

அவரது படைப்புகளில் பெரும்பாலாவை தேதி குறிப்பிடாததால் ஒவ்வொரு ஆண்டும் இந்த வருடம் அவர் சொன்னதில் என்ன நடக்கும் என்ற  ஆர்வத்தில் புரட்டுகின்றனர். எவை எல்லாம் இப்போது நடக்கும் என்ற யூகிக்கின்றனர்.

அப்படி இந்த ஆண்டிற்கான பட்டியலில் முதலில் இருப்பது ,"ஏழு மாத பெரும் போர், தீமையால் இறந்த மக்கள்" என்ற வாசகம் 2022 பிப்ரவரியில் இருந்து ரசிய-உக்ரைன் போர் நடந்து வரும் நிலையில்  இந்த போருக்குள் அமெரிக்கா நுழைந்தால் அணுஆயுதம் வைத்துள்ள இரண்டு பெரிய நாடுகள் சண்டையிடும் அணு ஆயுத போராக மாறிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அது மட்டுமின்றி "அரச கட்டிடத்தின் மீது வான நெருப்பு" என்ற சூசக வாசகம் நீண்டகாலமாக எதிர்பார்க்கும் மூன்றாம் உலக போர் வருமோ என்ற பயத்தையும் கிளப்பியுள்ளது.

இன்றைய காலத்தில் பணவீக்கம் என்பது பற்றி கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரியும் அனால் 400 வாரங்களுக்கு முன்னர் இருந்த ஒருவர், "கோதுமை விலை மிகவும் உயரும், அப்போது  மனிதன் தன் சக மனிதனை சாப்பிடுவான்" என்று எழுதியிருக்கிறார். இதில் முதல் பகுதி இப்போது நடந்துள்ளது.

பிறந்தது 2023… சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்!

கொரோனா பரவல், ரசிய போர், காரணமாக அநேக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ந்து உணவின் விலை பன்மடங்கு ஏறியுள்ளது. மீதி பாதி நடக்க இன்னும் கொஞ்சம் வருடங்கள் ஆகும் என்று நினைக்கிறோம்...

அடுத்தது... "செவ்வாய் கிரகத்தின் ஒளி அணைந்துவிடும்"இது கிரகத்தையே பாதிக்கும் வாசகமா இல்லை நம் முயற்சியில் இருந்து தத்துவத்தை சொன்னாரா என்று தெரியாது. ஆனால் உலக மக்கள் எலான் மஸ்க்கை இதனுடன் முடிச்சு போடுகின்றனர். 2029க்குள்  செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்புவேன் என்று சொன்ன spacex நிறுவனம் ட்விட்டர் சர்ச்சையால் பெரும் பின்னடைவுகளை பெற்று வருகிறது. இதனால் செவ்வாய்க்கு செல்லும் ஒளி அணைந்துவருவதாக நினைக்கின்றனர்.

இறுதியாக "நாற்பது வருஷம் வானவில் காணாது. 40 வருஷம் தினமும் காணும். வறண்ட பூமி மேலும் வறண்டு வளரும், அதைக் கண்டால் பெரும் வெள்ளம் வரும்" என்று சொன்னது இன்றைய காலநிலை மாற்றத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறது. காலநிலை மாற்றம் வானவில்லை பாதிக்கும் என்ற ஆய்வு முடிவுகள் கூட 2022 இல் வந்தது. இது நிஜமாக மாறுமோ என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வானவில்கள் எண்ணிக்கை! பாதிப்புகள் உண்டா?

நோஸ்ட்ராடாமஸ் எழுதிய எல்லாமே நடக்கவில்லை. அதில் ஒன்றிரண்டு உலக செய்திகளோடு ஒத்துப்போனது. மற்றதெல்லாம் காற்றில் கலந்தது. அப்படி தான் மேற்சொன்ன யுகங்களும். இதை ஒரு தூண்டுதலாக மட்டும் வைத்துக்கொண்டு பூமிக்கும் நமக்கும் நன்மை பயக்கும் செயல்களை நோக்கி ஓடினால் போதும். எல்லாம் நல்லதே நடக்கும். எதையும் சமாளித்துக்கொள்ளலாம்.

First published:

Tags: Climate change, New Year 2023, War