Home /News /trend /

ரயில் நிலையத்தில் பந்தாடப்பட்ட பார்சல் பொருட்கள்.. வீடியோ வைரலான நிலையில் ரயில்வே விளக்கம்..

ரயில் நிலையத்தில் பந்தாடப்பட்ட பார்சல் பொருட்கள்.. வீடியோ வைரலான நிலையில் ரயில்வே விளக்கம்..

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video | சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று, ரயிலில் பார்சல் அனுப்பும் நபர்களை பதற வைத்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Guwahati [Gauhati], India
இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து துறையாக ரயில்வே சிறந்து விளங்கினாலும், புகார்கள் மற்றும் சர்ச்சைகள் எழாமல் இல்லை. கட்டணம், சுகாதாரம், ரயிலில் விநியோகிக்கப்படும் உணவின் தரம் என அவ்வப்போது பல விஷயங்கள் குறித்து பிரச்சனைகள் எழுந்த வண்ணமே உள்ளன. தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று, ரயிலில் பார்சல் அனுப்பும் நபர்களை பதற வைத்துள்ளது.

அகமது கபீர் என்பவரது ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், ரயிலில் இருந்து இறக்க வேண்டிய பார்சல்களை ஊழியர்கள் கவனக்குறைவுடன் பந்தாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

குவஹாத்தி ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்டுள்ள வீடியோவில், அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் நிறுவனங்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள சில்லறை வியாபாரிகள் டெலிவரிக்காக அனுப்பிய பார்சல்களை, ரயில்வே ஊழியர்கள் ரயிலில் இருந்து பத்திரமாக வெளியே எடுத்து வருவதற்கு பதிலாக தூக்கி எரியும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்த வீடியோவில் பல பார்சல்கள் கிழிந்து போயும், குப்பை போல் ஒன்றன் மீது ஒன்றாக குவித்து வைக்கப்பட்டும் காட்சியளிக்கின்றன.தற்போது இணையத்தில் தீயாய் பரவி வரும் இந்த வீடியோவை 2.6 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். 5,000 மேற்பட்ட லைக்குகளும், 500க்கும் மேற்பட்ட கமெண்ட்களும் குவிந்துள்ளது. ஆனால் இந்த வீடியோ தற்போது எடுக்கப்பட்டது அல்ல என்றும், பழைய வீடியோ வைரலாக்கப்பட்டு வருவதாகவும் வடகிழக்கு எல்லை ரயில்வே தெரிவித்துள்ளது.

Also Read : இந்த படத்தில் மறைந்திருக்கும் 6 ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடித்தால் நீங்கள் தான் ரியல் ஜீனியஸ்!

இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், , “இது மார்ச், 2022 இல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ. குவஹாத்தி நிலையத்தில் உள்ள ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து பார்சலை இறக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. ரயில்வே பல்வேறு தரப்பினருக்கு ஒப்பந்த அடிப்படையில் பார்சலுக்கான இடத்தை முன்பதிவு செய்யும் வாய்ப்பை வழங்குகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.சமீபத்தில் இதேபோல் ரயில்வே சம்பந்தமான மற்றொரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலானது. வங்க தேசத்தில் பெண் ஒருவர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் இடம் கிடைக்காததால் ரயிலின் கூரை மீது ஏற முயற்சிக்கும் போது, ரயில்வே போலீசார் அவரைத் தடுத்து நிறுத்திய வீடியோ தான் அது.

Also Read : தன்னுடைய பெற்றோர்களுக்கு வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்திய விவசாயி - நெகிழ்ச்சி சம்பவம்.!

இதில் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் என்னவென்றால் அந்த பெண் ஏற முயன்ற ரயில்வே கூரை மீது ஏற்கனவே 20க்கும் மேற்பட்டோர் அமர்ந்துள்ளனர். அப்படி கூட்டம் இருக்கும் கூரையில் ஏறுவதற்காக தான், அந்த பெண்மணி ரயில் ஜன்னல் மீது ஏறி நின்று கொண்டு மேலே இருப்பவர்களிடம் உதவிக்கேட்கிறார். அப்போது பாதுகாப்பு பணிக்காக வந்த ரயில்வே போலீசார் இந்த காட்சியைப் பார்த்து, அந்த பெண்மணியை கீழே இறங்கிவிட்டனர். இப்படி தினந்தோறும் ரயில்வே மற்றும் ரயில் பயணிகள் தொடர்பாக ஆச்சர்யப்படும் வகையிலும், அதிர்ச்சியடையும் படியும் வீடியோக்கள் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Indian Railways, Trending, Viral Video

அடுத்த செய்தி