நோமா உணவகம்: டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் உள்ள நோமா உணவகம் உலக அளவில் புகழ்பெற்ற உணவகம் ஆகும். ரெனே ரெட்ஜெபி என்ற சமையல் கலைஞரால் கடந்த 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உணவகம், பல ஆண்டுகளாக உலகின் தலை சிறந்த உணவகங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்து வருகிறது. ரெஸ்டாரண்ட்ஸ் என்ற பிரிட்டிஷ் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் உலகின் மிகச் சிறந்த 100 உணவகங்களின் பெயர்களை பட்டியலிட்டு வருகிறது. அந்த பட்டியலில் நோமா உணவகம் 5 முறை முதலிடத்தை பிடித்திருக்கிறது. மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டில் வெளியான உலகின் 50 சிறந்த உணவகங்களின் பட்டியலிலும் நோமா உணவகம் முதலிடத்தை பிடித்தது.
அந்த வகையில், கடந்த 2019ல் உலக அளவில் 2வது இடத்தையும், 2010, 2011, 2012 ஆகிய காலக்கட்டங்களில் முதல் இடத்தையும் இடத்தையும், 2021ல் மீண்டும் ஒரு முறை முதலிடத்தையும் பெற்ற சிறப்பு வாய்ந்த உணவகம் ஆகும். நோமா உணவகத்தின் ஸ்பெஷல் சுவை மற்றும் உயர்தரம் கொண்ட உணவுக்காக மிகவும் குறுகிய காலத்திலேயே மக்களிடையே பிரபலமடைந்தது. மேலும் சர்வதேச அளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும், உணவுப் பிரியர்களையும் அதிக அளவில் ஈர்த்தது.
புகழ் பெற்ற இந்த நோமா உணவகம் சமையல் கலைக்கு சர்வதேச அளவில் வழங்கப்படும் ஒரு உயரிய அங்கீகாரமாக கருதப்படும் மிச்செலின் நிறுவனத்தின் மிச்செலின் ஸ்டார் விருதுகளை இதுவரை 3 முறை வென்றுள்ளது. இவ்வாறு மிக பிரபலமடைந்த நோவா உணவகம் 2021ஆம் ஆண்டில் கொரோனா தாக்கத்தின் போது ஏற்பட்ட லாக் டவுண் பிரச்சினைகளால் பெரும் நஷ்டத்தை சந்தித்தது.
இந்த நிலையில் நோமா உணவகம் வருகிற 2024ஆம் ஆண்டு முதல் மூடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நோமா உணவகத்தின் கட்டிடம் வரும் 2025 ஆம் ஆண்டு உணவு கண்டுபிடிப்புகளுக்கான பிரமாண்ட ஆய்வகமாக மாற்றப்படும் என அதன் உரிமையாளர் ரெட்ஜெபி தெரிவித்துள்ளார். இங்கு புதிய உணவு வகைகள், புதிய சுவைகளின் வளர்ச்சிக்கு ஒரு முன்னோடி மையமாக திகழும் என அவர் தெரிவித்துள்ளார்.
நோவா மூடலுக்கு 'தி மெனு' திரில்லர் படம் காரணமா?
ஃபைன் டைனிங் தொழில் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் உணவகத்தை மூடும் முடிவு எடுக்கப்பட்டதாக அதன் உரிமையாளர் Redzepi கூறியிருந்தார். ஆனால் உணவகம் மூடுவதற்கான காரணம் குறித்து பல கருத்துக்கள் பொதுமக்களிடையே நிலவி வந்தது. அதாவது தொழிலாளர்களை நடத்து விதம், அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது போன்ற விமர்சனங்களை எதிர்கொண்டது.
அதுமட்டும் அல்லாமல் நடிகர் ரால்ப் ஃபியன்ஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள உளவியல் த்ரில்லர் திரைப்படமான 'தி மெனு' நோவா மூடப்பட காரணம் என சமூக வலைதளங்களில் நோவா உணவகம் குறித்து நெட்டிசன்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த மெனு திரைப்படத்தில் உணவகம் குறித்து சில அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம் பெற்றுள்ளதால்தான் உணவகம் மூடப்படுவதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். அந்த படம் பிரத்யேக உணவகத்தைப் பார்வையிடுவதற்காக ஒரு தீவுக்குச் செல்லும் உணவகங்களின் கதை எனக் கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.