குடும்பத்தை பார்க்காமல், ஓய்வு நேரம் கிடைக்காமல் மனஅழுத்ததில் வாழ்க்கையை கழிக்கும் மருத்துவ ஊழியர்கள்...!

குடும்பத்தை பார்க்காமல், ஓய்வு நேரம் கிடைக்காமல் மனஅழுத்ததில் வாழ்க்கையை கழிக்கும் மருத்துவ ஊழியர்கள்...!

மனஅழுத்ததில் மருத்துவ ஊழியர்கள்

கடந்த ஆண்டில் சுகாதார ஊழியர்கள் அளித்த பங்களிப்புகள் உலகத் தலைவர்கள் மற்றும் குடிமக்களால் பாராட்டப்பட்டாலும், அவர்கள் எதிர்கொண்டுவரும் மனப் போராட்டங்களும் உடல் ரீதியான கஷ்டங்களும் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
உலகெங்கிலும் உள்ள மருத்துவ சமூகம் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக மன அழுத்தத்தை தாங்கி, கோவிட் போர்வீரர்களாக உருவெடுத்து, மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க தங்கள் உயிரைப் பணயம் வைத்து அயராது பணியாற்றி வருகிறது. கடந்த ஆண்டில் சுகாதார ஊழியர்கள் அளித்த பங்களிப்புகள் உலகத் தலைவர்கள் மற்றும் குடிமக்களால் பாராட்டப்பட்டாலும், அவர்கள் எதிர்கொண்டுவரும் மனப் போராட்டங்களும் உடல் ரீதியான கஷ்டங்களும் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகின்றன.

இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள மருத்துவ சுகாதார வல்லுநர்கள் இப்போது வரை மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் பிபிஇ கருவிகளில் மூழ்கி மக்களின் உயிரை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் எந்தளவுக்கு மனஅழுத்தத்திற்கு அழகியிருக்கிறார்கள் என்று கண்கூடாக பார்த்த ஒரு நோயாளி ஒருவர், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு மனநல நிபுணர் ஒருவர், இந்தியாவில் கொரோனா தொற்றுநோயைக் கையாளும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை மக்களுக்கு எடுத்துரைத்தார். இரண்டாவது அலைக்கு மத்தியில் பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் மருத்துவ ஊழியர்கள் மேலும் அதிக மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

நோய்த்தடுப்பு பராமரிப்பு ஆலோசகரான வந்தனா மகாஜன் என்பவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில் செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவ சுகாதார நிபுணர்களுடன் உரையாடுவதற்கு கிட்டத்தட்ட ஒரு வாரம் செலவிட்டார். மேலும் அவர் ட்விட்டரில் பகிர்ந்த ஒரு புகைப்படம் சோர்வடைந்த மருத்துவ சுகாதார பணியாளர் பிபிஇ கிட் அணிந்திருந்தபடியே ஓய்வெடுப்பதை சித்தரித்தது.அந்த செவிலியர் பேசிய விஷயங்களை தன் வலைதள பக்கத்தில் வந்தனா குறிப்பிட்டிருந்தார். அதில், " கொரோனா வைரஸ் தொடங்கியதிலிருந்தே மருத்துவமனையில் அந்த செவிலியர் இடைவிடாமல் பணிபுரிந்து வந்துள்ளார். ஆரம்பத்தில், செவிலியர் ஒரு ஹாஸ்டலில் தங்கியிருந்தார். அவருடைய மகன்கள் உறவினருடன் தங்கியிருந்தனர். அவரின் கணவர் கல்ஃப்-ல் பணிபுரிந்து வருகிறார். தற்போது தனது மகனுக்கு படிப்பு சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியம் இருப்பதால் இப்போது தினமும் வீட்டிற்கு செல்ல வேண்டி இருக்கிறது. தனது குடும்பத்தை பாதுகாப்பாக வைத்திருக்க, வேலையில் தனக்கு தொற்று ஏற்படக்கூடாது என்று செவிலியர் பிரார்த்தனை செய்து வருவதாக" தனது பதிவில் வெளியிட்டுள்ளார்.

Also read... ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரிப்பு -  50,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இறக்குமதி செய்ய  மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு!

மற்றொரு செவிலியர் ஒரு நோயாளியின் மரணத்திற்குப் பிறகு தனக்கு ஏற்பட்ட வேதனையை வெளிப்படுத்தினார். அவர் முந்தைய நாள் இரவு சிபிஆர் செய்து கொண்டிருந்த சமயம் அந்த நோயாளி உயிரிழந்துள்ளார். மருத்துவர்கள், செவிலியர்கள், சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள் வைரஸின் சுமையை தாங்கி வருவதாகவும் வந்தனா மேலும் தனது பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், எங்களின் உயிரியல் கடிகாரம் சீர்குலைந்துள்ளது ஒரு சகோதரி வந்தனாவிடம் தனது வேதனையை பகிர்ந்துள்ளார். "அவர்களுக்கு வயிற்றுப் பிரச்சினைகள், வாயில் புண்கள் ஆகியவை உள்ளன. மாதவிடாய் காலங்களில், சானிட்டரி பேடை மாற்றுவது என்பது அவர்களால் இயலாத காரியம் ” என்று வந்தனா தனது பதிவில் எழுதியிருந்தார்.

கோவிட் -19 தொற்றுநோயைக் கையாளும் மருத்துவ பணியாளர்களுக்கு சிறந்த சுகாதார மற்றும் மனநல ஆலோசனையின் அவசியம் குறித்து பலர் ஆலோசகர் வந்தனாவின் பதிவுக்கு கருத்து தெரிவித்ததன் மூலம் அவரது பதிவு சமூக ஊடகங்களில் நிறைய ஆதரவைப் பெற்று வருகிறது என்பதை பார்க்கலாம். இதற்கிடையில், கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் நாளொன்றுக்கு இரண்டு லட்சம் புதிய கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 2 ஆம் தேதி முதல், இந்தியா மிக அதிக பாதிப்புக்குள்ளான நாடு என்ற சாதனையை பதிவு செய்துள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: