சண்டையிட்டு வரும் ரத்தம் அல்ல... தெரிந்து கொள்வோம் பூநாரையின் தாய்ப்பாசம்...!

பூநாரையின் தாய்ப்பாசம்
- News18 Tamil
- Last Updated: February 21, 2020, 1:10 PM IST
இந்த வீடியோவில் பூநாரை தனது பசித்த குஞ்சிற்கு உணவூட்டிய செயல் இணையத்தில் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. இதற்கு காரணம் பலரும் பூநாரை ரத்தம் சொட்ட சொட்ட குஞ்சிற்கு உணவூட்டுவதாக எண்ணி இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
பூநாரை அல்லது செங்கால் நாரை என்பது நாரை வகைப் பறவையாகும். இதன் அலகு அகலமாகவும், வளைந்தும் காணப்படும். இவை சகதி நிறைந்த நீர்நிலைகளில் உணவு தேடும். மிதவை உயிரினங்கள், சிறிய மீன்கள், புழு, பூச்சிகளை அலகால் எடுத்து, வடிகட்டும். பிறகு உணவை விழுங்கிவிடும். இதன் ஆங்கிலப் பெயர் "பிளமிங்கோ" இலத்தீன் மொழியிலிருந்து வந்தது.ஆப்பிரிக்காவின் பகுதிகள், தெற்கு ஐரோப்பா, தெற்கு, தென்மேற்கு ஆசியா ஆகிய பகுதிகளில் பூநாரைகளில் அதிகம் காணப்படுகின்றது. தற்போது இணையத்தை கண்கலங்க வைத்த இந்த பூநாரையின் வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Also see... சேற்றில் விழுந்து எழ முடியாமல் பரிதவித்த மான்...ஒன்று கூடி காப்பாற்றிய இளைஞர்கள்..!
இந்த வீடியோவில் பூநாரை என்ற பறவை இனத்தில் ஆண் பறவை குஞ்சுகளுக்குப் பால் ஊட்டுகிறது. இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், இந்த பறவைகள் சண்டையிட வில்லை. இது இயற்கையின் மிக ஆச்சர்யமிக்க ஒன்றாகும்.
பெற்றோர் ஃபிளமிங்கோக்கள் தங்கள் செரிமானப் பாதைகளில் கிராப் பால் உற்பத்தி செய்து உணவாக கொடுக்கின்றன. இந்த கிராப் பால் புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்தது. குஞ்சுகள் திடமான உணவை உண்ணத் தொடங்குவதற்கு முன்பு பெற்றோர் பறவைகள் இதனை கொடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
சில பறவை இனங்கள் இளம் பறவைகளுக்கு கிராப் பால் (crop milk) என்ற ஒரு பால் போன்ற திரவத்தை ஊட்டுகின்றன. பாலூட்டிகள் போலன்றி ஆண் மற்றும் பெண் இரு பாலின பறவைகளும் அந்த பாலை சுரக்கின்றன. கிராப் பால் முக்கிய உணவாக இளம் குஞ்சுகளுக்கு உள்ளது. பிளமிங்கோ குஞ்சுகள் இப்பாலை பிறந்த இரண்டு மாதங்களுக்கு முழு உணவாக அருந்தி வளர்கின்றன.
Also see...உள்ளம் குழந்தைதான்.. புல்வெளியில் புரண்டு உருளும் யானையின் குறும்பு!
No they are not fighting. This is one of the most amazing thing in nature. Parent flamingos produce crop milk in their digestive tracts & regurgitate it to feed young ones. See how together they are doing it. Source: Science Channel. pic.twitter.com/GrJr4irGox
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) February 20, 2020
பூநாரை அல்லது செங்கால் நாரை என்பது நாரை வகைப் பறவையாகும். இதன் அலகு அகலமாகவும், வளைந்தும் காணப்படும். இவை சகதி நிறைந்த நீர்நிலைகளில் உணவு தேடும். மிதவை உயிரினங்கள், சிறிய மீன்கள், புழு, பூச்சிகளை அலகால் எடுத்து, வடிகட்டும். பிறகு உணவை விழுங்கிவிடும். இதன் ஆங்கிலப் பெயர் "பிளமிங்கோ" இலத்தீன் மொழியிலிருந்து வந்தது.ஆப்பிரிக்காவின் பகுதிகள், தெற்கு ஐரோப்பா, தெற்கு, தென்மேற்கு ஆசியா ஆகிய பகுதிகளில் பூநாரைகளில் அதிகம் காணப்படுகின்றது. தற்போது இணையத்தை கண்கலங்க வைத்த இந்த பூநாரையின் வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Also see... சேற்றில் விழுந்து எழ முடியாமல் பரிதவித்த மான்...ஒன்று கூடி காப்பாற்றிய இளைஞர்கள்..!
இந்த வீடியோவில் பூநாரை என்ற பறவை இனத்தில் ஆண் பறவை குஞ்சுகளுக்குப் பால் ஊட்டுகிறது. இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், இந்த பறவைகள் சண்டையிட வில்லை. இது இயற்கையின் மிக ஆச்சர்யமிக்க ஒன்றாகும்.
பெற்றோர் ஃபிளமிங்கோக்கள் தங்கள் செரிமானப் பாதைகளில் கிராப் பால் உற்பத்தி செய்து உணவாக கொடுக்கின்றன. இந்த கிராப் பால் புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்தது. குஞ்சுகள் திடமான உணவை உண்ணத் தொடங்குவதற்கு முன்பு பெற்றோர் பறவைகள் இதனை கொடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
This crop milk is made up of protein & fat rich cells of the lining of crop, which is part of alimentary canal where food is stored before digestion. Which effectively means they are feeding their stomach before kids can start eating solid food.
As they say "ख़ून से सींचना”