நோ சார்.. தயவு செய்து போகாதீங்க.. மோடி ட்வீட்டுக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்

நோ சார்.. தயவு செய்து போகாதீங்க.. மோடி ட்வீட்டுக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்
  • Share this:
பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் இருந்து வெளியேற நினைப்பதாக ட்வீட் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்தான் தற்போது பேசுபொருளாகி உள்ளது.

உலக அளவில் அதிக பாலோவர்களை கொண்ட அரசியல் தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார். எதற்காக திடீரென தான் சமூக வலைதளத்தில் விலக நினைப்பதாக பதிவிட்டார் என்று நெட்டிசன்கள் குழம்பியுள்ளனர்.

நிறைய பேர் நோ சார் போகாதீங்க என்று ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதுதான் தற்போது டெரெண்டிங்கும் கூட.
தனது முடிவை மறுபரிசீலனை செய்ய பலர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியும் மோடியை சமூக வலைதளங்களில் இருந்து விலக வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதேசமயம் வெறுப்பை கைவிடுமாறு ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.சமூக வலைதளங்கள் தான் சாமானிய மக்களை நேரடியாக தொடர்புகொள்ள உதவும். தயவு செய்து விலக வேண்டாம் என்று ஒருவர் கூறியுள்ளார்.அதேபோல், நீங்கள் தான் கோடிக்கணக்கான மக்களின் உத்வேகம் என்று ஒருவர் கருத்திட்டுள்ளார்.இன்னும் ஆயிரக்கணக்கான ட்வீட்கள் மோடியை சமூக வலைதளங்களில் இருக்க கூறி பதிவாகிவருகின்றன.

 
First published: March 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading