வாழ்விட அழிப்பு, உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு, வேட்டையாடப்படுதல் என பல வகைகளில் பாதிக்கப்பட்டாலும், விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே எப்போதும் ஒரு நல்ல பிணைப்பு இருந்து வருகிறது. கடலில் விழுந்த செல்போனை கொண்டு வந்து கொடுக்கும் டால்பின், ஆண் சிங்கத்திடம் இருந்து ஜூ ஊழியரை காப்பாற்றும் பெண் சிங்கம், கூண்டுக்குள் தவறி விழுந்த குழந்தையை தனது கூட்டாளிகளிடம் இருந்து காப்பாற்றிய கொரில்லா என விலங்குகள் மனிதர்களிடம் அளவுக்கு அதிகமாக நேசத்தை பொழியும் ஏராளமான வீடியோக்களை பார்த்திருப்போம்.
அதேபோல் விலங்கியல் பூங்காவிற்கு செல்லும் சிலர் கூண்டுக்குள் உள்ள மிருகங்களிடம் சேட்டை செய்து, அவற்றிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட வீடியோக்களும் இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது. கூண்டுக்குள் கிடக்கும் விலங்குகளுக்கு உணர்ச்சி உண்டு, அவை ‘நான் எனது காட்டை விட்டு வந்து உங்களுடன் நன்றாக இல்லை’ என்பதை பல்வேறு சமிஞ்சைகள் மூலமாக மனிதர்களுக்கு உணர்த்த முயல்கின்றன. அப்படி விலங்கியல் பூங்காவில் யானை ஒன்று செய்த சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.
மிருகக்காட்சி சாலை ஒன்றில் உள்ள யானையை அங்கு வந்த சுற்றுலா பயணிகள் பார்த்துக் கொண்டிருந்தனர். அது தனது நீளமான துதிக்கை நீட்டிக்கொண்டிருப்பதை பார்த்த பெண்கள் அதனை தொட்டு, தடவிக்கொடுத்தனர். அதனை யானை வரவேற்ற நிலையில், அங்கிருந்த பெண் ஒருவர் தனது செல்போனில் அக்காட்சியை செல்ஃபியாக்க முயன்றார். அவர் செல்போனை வெளியே எடுப்பதை பார்த்ததும் கோபமான யானை, தனது துதிக்கையால் அப்பெண்ணின் கன்னத்தில் ‘பொளேர்’ என அடித்துவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் தனது கையில் இருந்த செல்போனை கீழே போட்டுவிட்டார். யானை அந்த பெண் ஷாக்காகி நின்ற சில நிமிடங்களியே தனது துதிக்கையை வெளியே நீட்டி, செல்போனை எடுத்து வைத்துக் கொள்கிறது. இந்த காட்சி தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.
ஏற்கனவே மிருக காட்சி சாலைகளில் அடைந்து கிடக்கும் கோபமூட்டும் வகையில் செல்போனைக் கொண்டு போட்டோ எடுப்பது தவறு என்றும், நமது சந்தோஷத்திற்காக வாயில்லாத ஜீவன்களின் உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிப்பதில்லை என்றும் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. பார்மிஷன் இல்லாமல் பள்ளிக்கு செல்போன் எடுத்து வந்த மாணவனிடம் இருந்து அதனை மிடுங்கி வைத்துக்கொள்ளும் வாத்தியார் போல, சுற்றுலா பயணிக்கு யானை எடுத்த படம் மனித சமூகத்திற்கான விழிப்புணர்வு என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
Fact: Elephants don’t give a sh*t about your Wordle score. 🐘📱#FailArmy
.
.#nature #funny #fail #elephant pic.twitter.com/NHSqqcDpcD
— FailArmy (@failarmy) May 22, 2022
அதேபோல் மற்றொரு வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் குட்டி உட்பட மூன்று யானைகள் வனப்பகுதிக்குள் ஜேசிபி இயந்திரத்தைக் கட்டு அச்சமடைகின்றன. இந்த இடத்திற்குள் வர வேண்டாம் என்பது போல் பெரிய யானை ஒன்று கர்ஜிக்கிறது. ஆனால் யானையின் கூச்சலை கண்டுகொள்ளாதவர்கள், ஜேசிபியை அதனை நோக்கி செலுத்தி மேலும் அச்சுறுத்துகின்றனர். இதனால் அச்சமடைந்தும், எச்சரிக்கும் வகையிலும் பிளிறும் யானையின் ஒலியைக் கேட்டு அந்த கூட்டம் சிரிக்கும் சத்தமும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
A bunch of miscreants tried to scare a elephant herd using a JCB excavator. The incident happened near Bhadra Wildlife Sanctuary in Chikkamagaluru. The herd also had a calf but that didn't stop these hooligans. They seem to be enjoying it & deriving sadistic pleasure. #wildlife pic.twitter.com/EtNHniFVXD
— Harish Upadhya (@harishupadhya) March 22, 2022
Also see... பிளாஸ்டிக் பக்கெட்டின் விலை ரூ.36,000... ஷாக் கொடுத்த அமேசான்
இச்சம்பவம் யானைகளின் முக்கிய வாழ்விடமான பத்ரா புலிகள் சரணாலயத்திற்குள் நடந்துள்ளது. மேலும் ஜேசிபி இயந்திரம் வனத்துறையால் சாலைப் பணிகளுக்காக பயன்படுத்துவதற்காக நிறுத்தப்பட்டிருந்தது என்பது தெரியவந்துள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வாகனத்தில் சென்றவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Elephant, Slaps Audience