Home /News /trend /

வரேன்டா சின்னசாமி... மூன்றே வார்த்தையில் ஊழியர் எழுதிய ராஜினாமா கடிதம் வைரல்

வரேன்டா சின்னசாமி... மூன்றே வார்த்தையில் ஊழியர் எழுதிய ராஜினாமா கடிதம் வைரல்

வைரல்

வைரல்

வெறுமனே மூன்றே வார்த்தைகளில் பணிவிலகல் கடிதம் அனுப்பியிருக்கிறார் ஊழியர் ஒருவர். அதில், “பை, பை, சார்’’ என்று மட்டுமே கூறியிருக்கிறார்.

    சுயதொழில் செய்து, சொந்தக் காலில் உயர்ந்து நிற்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடாது. நம்மில் பலர் ஏதேனும் ஒரு நிறுவனம், தொழிற்சாலை போன்றவற்றில் வேலை செய்யும் ஊழியராக இருந்து வருகிறோம். இதில் எல்லோருக்கும் மனதிற்கு பிடித்தமான வேலை அமைந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. அதனால் தான் அவ்வபோது நாம் வேலையை மாற்றிக் கொண்டே இருப்போம்.

    எப்படியாகினும் எல்லோருமே வாழ்க்கையின் ஏதோ ஒரு தருணத்தில் தனக்கு பிடிக்காத வேலையில் ஏதோ ஒரு கட்டாயத்தின் பேரில் இருந்திருப்பார்கள். சிலருக்கு வாழ்க்கையே அதுதான் கதி என்றாகிவிடும். இப்படி, வேலையை மாற்றுவதற்கு கூட வழியின்றி பிடிக்காத வேலையை செய்து கொண்டிருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்வதைக் காட்டிலும் வேறு தீர்வு இல்லை. ஆனால், பிடிக்காத வேலையை விட்டுவிட வேண்டும் என முடிவு செய்தவர்கள், தங்கள் பணிவிலகல் கடிதத்தில் என்னென்ன குறைகளை சுட்டிக் காண்பிக்க வேண்டும் என்று ஒரே பட்டியலே போட்டு வைத்திருப்பார்கள்.

    ஒரு வேலை பிடிக்கவில்லை என்றதுமே, அடுத்த இடத்தில் வேலையை தயார் செய்து கொண்டு, தற்போது இருக்கும் நிறுவனத்தில் பணிவிலகல் கடிதம் கொடுப்பதைப் போன்ற மகிழ்ச்சி வேறெதுவும் இருக்க முடியாது. எதையோ நாம் சாதித்து விட்டதைப் போன்ற மனநிறைவு ஏற்படும்.

    சிலருக்கு தற்போதுள்ள நிறுவனத்தை விட்டுச் செல்ல மனமில்லை என்றாலும், எதிர்கால வளர்ச்சி அல்லது ஊதிய உயர்வு போன்ற காரணங்களால் வேறு நிறுவனத்திற்கு செல்வார்கள். அத்தகைய சூழல்களில் பழைய நிறுவனத்திற்கு, தான் எவ்வளவு தூரம் நன்றிக்கடன் உள்ளவராக இருக்கிறேன் என்பதையும், பிரிய மனம் இல்லாமல் விடை பெறுவதாகவும் தங்கள் வார்த்தைகளில் வெளிப்படுத்துவார்கள்.

    மோமோஸ் சாப்பிட்டு பரிதாபமாக உயிரிழந்த நபர்! நடந்தது என்ன?

    சரி விஷயத்திற்கு வருவோம். பழைய நிறுவனத்தை உங்களுக்குப் பிடித்திருந்தாலும் அல்லது பிடிக்காவிட்டாலும் ஏன் வேலையை விடுகிறோம் என்பதற்கு வலுவான சில காரணங்களை பட்டியலிட்டு தானே நாம் பணிவிலகல் கடிதத்தை தயார் செய்வோம். ஆனால், இப்படியான விளக்கங்கள் எதுவும் இல்லாமல் வெறுமனே சில வார்த்தைகளில் பணிவிலகல் கடிதம் கொடுக்க முடியுமா?

    டிவிட்டரில் வைரல் ஆகும் பணிவிலகல் கடிதம்

    ஆம், வெறுமனே மூன்றே வார்த்தைகளில் பணிவிலகல் கடிதம் அனுப்பியிருக்கிறார் ஊழியர் ஒருவர். அதில், “பை, பை, சார்’’ என்று மட்டுமே கூறியிருக்கிறார். இந்தக் கடிதத்தை டிவிட்டரில் ஒருவர் வெளியிட, அது தற்போது வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தப் பதிவை லைக் செய்துள்ளனர்.



    பாராட்டும் நெட்டிசன்கள்

    இந்தப் பதிவிற்கு கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள் பலரும் இதை பாராட்டி வருகின்றன. பயனாளர் ஒருவர் வெளியிட்டுள்ள கமெண்டில், “நான் வேலையை விட விரும்புகிறேன். என்னுடைய கடைசி பணி நாளில்… என்றெல்லாம் ஏன் கதை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். இதுபோல நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட வேண்டியதுதான்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    வடிவேலு ஒரு படத்தில் உன்னை வேலையை விட்டு தூக்கிவிட்டேன் என்றதும் முதலாளியை பெயர் சொல்லி வரேன்டா சின்னசாமி என்பார். இந்த கடிதத்தை பார்த்ததும் அந்த காட்சி தான் மனதில் வந்து செல்கிறது என்றும் நெட்டிசன்கள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி