நித்யானந்தாவின் உணர்ச்சிகர உரைகளை கையில் எடுத்த டிக்டாக் வாசிகள்...! கலக்கும் வீடியோக்கள்

நித்யானந்தாவின் உணர்ச்சிகர உரைகளை கையில் எடுத்த டிக்டாக் வாசிகள்...! கலக்கும் வீடியோக்கள்
  • News18
  • Last Updated: December 20, 2019, 11:26 AM IST
  • Share this:
நித்யானந்தாவின் இணையப்பேச்சை கிண்டலடித்து சமூகவளைதளங்களில் வெளியாகிவரும் வீடியோக்கள், பார்ப்போரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன.

நித்யானந்தாவை ஒரு பக்கம் வழக்குகள் துரத்தினாலும், நித்யானந்தா பேசிய சில வார்த்தைகளைக்கொண்டு, இளசுகள் தொடங்கி முதியவர்கள் வரை இணையத்தில் செய்யும் கலாட்டாவுக்கு எல்லையே இல்லை போலிருக்கிறது.


நித்யானந்தா பேச்சு மட்டுமின்றி, அவரது சிறு சிறு முகபாவங்களைக் கூட இணையவாசிகள் விட்டுவைக்கவில்லை.பிரபலமான வாக்கியங்களை, குறும்பு கொப்பளிக்க பல்வேறு கோணங்களில் செய்து ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், the me என்ற ஆங்கில வசனமும், ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரியும் தான் தற்போது டிக்டாக் கலைஞர்கள் மத்தியில் தீயாய்ப் பற்றி எரிகிறதுஇவை தவிர அவரைப் போலவே உடையணிந்து, அவரைப் போலவே முகபாவனைகளுடன் பேசி அசத்துகின்றனர் டிக்டாக் கலைஞர்கள்

குஜராத் ஆசிரம வழக்கு மற்றும் பாலியல் பலாத்கார வழக்குகளில் குஜராத் மற்றும் கர்நாடக மாநில அரசுகள் நித்யானந்தாவுக்கு ப்ளூகார்னர் நோட்டீஸ் அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளன. எதையும் கண்டுகொள்ளாத நித்யானந்தா, தானுண்டு தனது வேலையுண்டு என, தினசரி சத்சங்கம் மூலம் ஜாலியாக அருளுரைகள் ஆற்றி வருகின்றார். நித்யானந்தாவின் பேச்சு இப்போது, ஆல் இந்தியா அளவில் பிரபலமாகியுள்ளது. எல்லோரும் கைலாசாவை பற்றி பேச ஆரம்பித்துவிட்டனர்.

டிக்டாக் கலைஞர்களுக்கு தற்போதைக்கு கண்டெண்ட் கொடுக்கும் தெய்வமாக நித்யானந்தா காட்சியளிக்கிறார்.கலாய் டிக்டாக் வீடியோக்களை பார்த்தால், நித்யானந்தாவின் உரையைவிட தங்களை மறந்து வயிறு குலுங்க சிரிக்க உதவும் என்பதில் சந்தேகமே இல்லை.
First published: December 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading