திருமண விழா பேனரில் நித்யானந்தா புகைப்படம்... இளைஞர்களின் விநோத ஆசை!

திருமண விழா பேனரில் நித்யானந்தா புகைப்படம்... இளைஞர்களின் விநோத ஆசை!
திருமண போஸ்டர்
  • Share this:
திருமண விழா பேனரில் நித்யானந்தாவின் புகைப்படத்தை அச்சிட்டு அசத்தியுள்ளனர் அவரது தீவிர ரசிகர்கள்.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து பூவாளூர் அருகே பல்லவபுரம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள இளவரசன் விஜி ஆகியோரின் திருமணம் லால்குடி அருகே உள்ள ஸ்ரீ தேவி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் பல்வேறு பேனர்கள் வைக்கப்பட்டன. அதில் நித்தியானந்தா புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. இந்த பேனரை திருமணத்துக்கு வந்த பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர்.


நித்தியானந்தா புகைப்படத்துடன் பிளக்ஸ் பேனர் வைத்தது குறித்து அவர்களிடம் கேட்டபோது, “இப்போது சமூக வலைதளங்களில் அதிக ட்ரெண்டிங்கில் உள்ளவர் நித்தியானந்தா. ஃபேஸ்புக் வலைதளங்களில் எதை எடுத்துக் கொண்டாலும் நித்தியானந்தாவின் வீடியோ தான் வந்து கொண்டு இருக்கிறது அதனால்தான் அவருடைய போட்டோவை வைத்து பேனர் அடித்தோம். நித்தியானந்தா வித்தியாசமாக இருப்பதால் எங்களுக்கு பிடித்துள்ளது.குறுகிய காலத்தில் அதிக வளர்ச்சி அடைந்தவர் நித்தியானந்தா. அவர் கைலாசத்தில் இருக்கிறார் என்கிறார். அது எங்கே இருக்கிறது என்று தெரிந்தால் நாங்களும் செல்வோம். அப்படி ஒரு நாடு இருக்கும் என்றால் அதை தெரிந்து கொள்வதற்காகவே இந்த போஸ்டர் அடித்தோம்நித்தியானந்தா எதைப் பற்றியுமே கவலைப்படுவது கிடையாது. யார் எது சொன்னாலும் அவர் மனதிற்கு என்ன தோன்றுகிறதோ அதை தான் அவர் செய்து கொண்டிருக்கிறார். இதனால் அவருடைய கொள்கை எங்களுக்கு ரொம்ப பிடித்துள்ளது. மேலும் நித்யானந்தா எப்போதுமே குதூகலமாக, ஜாலியாக இருக்கிறார் இது எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்துள்ளது.‘நோ சூடு நோ சொரணை’ என்று நித்தியானந்தா அடிக்கடி கூறுவார். அது எங்களுக்கு பிடித்துள்ளது. சமூக வலைதளங்களில் இளைஞர்கள் அனைவருமே அந்த வசனத்தை போட்டு தான் பேசுகிறார்கள்.

அதனால் தான் பேனரில் அந்த வாசகத்தை அடித்தோம் அதேபோன்று தான் எங்களை யார் என்ன சொன்னாலும் நாங்கள் கவலைப்படுவதில்லை. எங்களுக்கு என்ன மனதில் தோன்றுவதை நித்தியானந்தா போன்று நாங்களும் செய்து கொண்டு இருக்கிறோம். அவரைப் போல் குறுகிய காலத்தில் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நாங்களும் ஆசைப்படுகிறோம்” என்றனர்.

Also see:


 
First published: February 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்