பாலியல் வன்கொடுமை ,ஆட்கடத்தில் ,மோசடி என்று இந்தியாவின் பல மாநிலங்களில் வழக்குகளில் சிக்கி , கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தனது சில சீடர்களுடன் தலைமறைவானவர் சாமியார் நித்தியானந்தா. கோயில் கட்ட நிதி என்று கூறியும் , தன்னை நம்பிவந்தவர்களிடம் சித்துவேலைகளை காட்டி மோசடி செய்தும், அடித்துச் சென்ற பணத்தில் தனிதீவு ஒன்றை குத்தகைக்கு எடுத்துக்கொண்டு, கைலாசா என்ற நாட்டை அறிவித்தார் நித்தியானந்தா.
கைலாசாவில் இருந்து உலகம் முழுவதும் உள்ள தனது சீடர்களுக்கு ஆன்மீக சத்சங் என்ற நேரலை சொற்பொழிவை பேசிவந்தார். ஆரம்பத்தில் நான் நெருப்பு. என்னை யாரும் எதும் செய்யமுடியாது என்று பேசிவந்தவர் திடீரென நான் ஒரு பொறம்போக்கு என்று தன்னை தானே திட்டிக் கொள்ளவும் செய்தார். நித்தியின் இப்படி பட்ட பேச்சுகள் இணையத்தில் வைரலாகி கைலாசாவில் நித்தி ஜாலியாக இருக்கிறார் போல என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.
Also Read : மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கு... ரூ.40 கோடி கதை பின்னணி என்ன?
ஆனால் உண்மையோ வேறு, இந்தியாவில் மோசடியில் ஈடுப்பட்டு தனது வருமானத்தை இழந்த நித்தியானந்தா அமெரிக்கா போன்ற 150 திற்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கிளை மடங்களை பரப்பியிருந்தார். இந்த வெளிநாட்டு கிளைகளில் இருந்து வரும்ப வருமானத்தை நம்பி தான் நித்தி கைலாசா என்ற நாட்டை அறிவித்து தப்பியது. நித்தியின் லீலைகள் அனைத்து இடங்களிலும் தெரியவர வெளிநாட்டு வருமானங்களும் நித்தியானந்தாவிற்கு குறைய தொடங்கின . கொரோனா தொற்று பரவல் காரணமாகவும் அனைத்து இடங்களிலும் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் கைலாசா, லாசாகி போனதாக தெரிகின்றது.
முறையான இந்திய உணவு பொருட்கள் கிடைக்காமல் போனதாலும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாததாலும் கைலாசாவில் பஞ்சம் தலைவிரித்தாடுவதாக சமீபத்தில் அங்கிருந்து தப்பித்துவந்த ஒரு சீடர் தெரிவித்திருந்தார். அதை உண்மையாக்கும் விதமாக எப்போதும் பிரிஷ்காக போட்டோக்கு போஷ் கொடுக்கும் சாமியார் நித்தியானந்த படுக்கையில் உடல் சோர்வுற்ற நிலையில் இருப்பது போன்று போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
அதில் கண்கள் சொறுகி ,உடல் எடைகுறைந்து மெலிந்த தேகத்திடன் படுக்கையில் படுத்துள்ளார். அத்துடன் நான் திரும்ப வருவேனு சொல்லு என்றும் தன்கைபட எழுதி கையெழுத்தை போட்டுள்ளார். தனது கையெழுத்தில் கூட எழுத்துப்பிழை ஏற்படும் அளவிற்கு தனது பெயரை தவறாக எழுதி அதை அடித்து திருத்தி எழுதியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நித்தியானந்தா சிகிச்சைக்காக இந்தியா வருவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவரை இதுவரை கலாய்த்து வந்த நெட்டிசன்களும் நலம் பெற வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.