ஃபோர்ப்ஸ் சக்திவாய்ந்த பெண்கள்... டாப் 100 பட்டியலில் நிர்மலா சீதாராமன்...!

Forbes 2019: World's Most Powerful Women | "காலநிலையைக் காக்க வலியுறுத்தும் 16 வயதான க்ரெட்டா தன்பெர்க் இப்பட்டியலில் 100-ம் இடம் பிடித்துள்ளார்"

ஃபோர்ப்ஸ் சக்திவாய்ந்த பெண்கள்... டாப் 100 பட்டியலில் நிர்மலா சீதாராமன்...!
நிர்மலா சீதாராமன்
  • News18
  • Last Updated: December 13, 2019, 8:25 PM IST
  • Share this:
ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட டாப் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பெற்றுள்ளார்.

சர்வதேச அளவில் சக்திவாய்ந்த பெண்களின் டாப் 100 பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தை ஜெர்மன் தலைவர் ஏஞ்சலா மேர்கல் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் க்றிஸ்டின் லகார்ட் மற்றும் மூன்றாம் இடத்தில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இப்பட்டியலில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா 29-ம் இடத்தில் உள்ளார். இந்தியாவின் முதல் பெண் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் பட்டியலில் 34-ம் இடம் பிடித்துள்ளார். இந்தியர்களான ஹெச்.சி.எல் தலைவர் ரோஹினி நாடார் மல்ஹோத்ரா 54-ம் இடத்திலும் பயோகான் நிறுவனர் மஜும்தார் ஷா 65-ம் இடத்திலும் உள்ளனர்.


சமீப காலமாக காலநிலையைக் காக்க வலியுறுத்தி உலகம் முழுவதும் போராட்டங்களும் பிரசாரங்களும் நடத்தி வரும் 16 வயதான க்ரெட்டா தன்பெர்க் இப்பட்டியலில் 100-ம் இடம் பிடித்துள்ளார்.

மேலும் பார்க்க: காலநிலை போராளி க்ரெட்டா தன்பெர்க்-க்கு கவுரவம் செய்த ‘டைம்’ இதழ்!
First published: December 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading