இதை நைட் 12 மணிக்கு பார்த்தா என்னாகும்?- வைரல் வீடியோ!

வைரல் வீடியோ

காகங்களை விரட்டுவதற்காக செய்யப்பட்ட பொம்மையின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 • Share this:
  சில நேரங்களில் மக்கள் வழக்கமான விஷயங்களில் எளிமையான மாற்றங்களைச் செய்து அவற்றை இன்னும் சிறப்பாக செய்து பலரையும் வியக்க வைக்கின்றனர். அந்த வகையில் தற்போது புதுமையான ஸ்கேர்குரோ(scarecrow) ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மிகவும் வேடிக்கையான இந்த ஸ்கேர்குரோவின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது, மேலும் இது முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் உட்பட பலரையும் கவர்ந்துள்ளது.

  ட்விட்டரில் வெளியான இந்த வீடியோவில், கீழே ஒரு சுருள் கம்பியுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு குச்சியில் ஸ்கேர்குரோ பொருத்தப்பட்டுள்ளது. அதன் மேற்புறத்தில் சைக்கிளில் உள்ளது போன்ற ஒரு சுழற்சி கைப்பிடி உள்ளது மற்றும் ஸ்கேர்குரோ உருவம் அதை தனது இரண்டு கைகளால் பிடித்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், காற்று அந்த முழு உருவத்தையும் நகர வைக்கிறது. அதாவது காற்று வீசும் திசையை பொறுத்து அந்த உருவம் அசைகிறது. ஸ்கேர்குரோ என்றால் பறவைகளை விளை நிலத்திலிருந்து அச்சுறுத்தித் துரத்துவதற்காக நிறுத்தப்படும் கலைநயமற்ற ஆள் உருவம், இது கொல்லைப் பொம்மை என்றும் அழைக்கப்படுகிறது.

   


  தற்போது ஒரு வித்தியசமான ஸ்கேர்குரோ ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த வீடியோ ஷேர் செய்யப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் 10,000க்கும் மேற்ப்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. தற்போது வரை 25000 பேர் இந்த வீடியோவிற்கு லைக் செய்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் இந்த வீடியோவிற்கு லைக் செய்துள்ளனர். 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியாவை பார்வையிட்டுள்ளனர். ஒருவர் இந்த வீடியோவை முதலில் பார்க்கும் போது சுவாரஸ்யமாகவும், வேடிக்கையாகவும் தோன்றினாலும், ஒரு விநாடிக்கு இடைநிறுத்தி, இரவில் அதைப் பார்ப்பது எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

  Photos : ‘ராமேஸ்வரத்தை மிஸ் பண்றேன்’..நடிகை கீர்த்தி சுரேஷின் ஜாலி ட்ரிப் போட்டோஸ்

  அதற்கு மற்றொரு யூசர் ஒருவர், "ஒரு பார்வையாளர் இதை முதன்முறையாக, இரவில் பார்க்கிறார்" என்று கருத்து தெரிவித்தார். "இது பேட்மேன் கூட பயப்படும் ஸ்கேர்குரோவின் வகை"என மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார். "இந்த உருவம் காகங்களை அல்லது மனிதர்களை பயமுறுத்துவதா?" "காகங்களை மறந்துவிடுங்கள், இதை 1:12 AM மணியளவில் பார்த்த பிறகு நான் கூட பயப்படுகிறேன்" என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

   
  Published by:Tamilmalar Natarajan
  First published: