Home /News /trend /

சாஃப்ட்வேர் மாப்பிள்ளைக்கு ‘நோ’.. டாக்டர்ன்னா ஒகே.. - வைரல் ஆகிய திருமண விளம்பரம்

சாஃப்ட்வேர் மாப்பிள்ளைக்கு ‘நோ’.. டாக்டர்ன்னா ஒகே.. - வைரல் ஆகிய திருமண விளம்பரம்

வைரலான விளம்பரம்

வைரலான விளம்பரம்

Viral Incident | மும்பையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் சமீர் அரோரோ, இந்த விளம்பரத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அந்த நிபந்தனைகளில் ஒன்றுதான் இப்போது சமூக வலைதளத்தில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
திருமணத்திற்கு வரன் தேடுவது பெருங்கடலில் நீந்தி கரை சேருவதை போல ஆகும். அவ்வளவு எளிதில் வரன் கிடைத்து விடாது. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் தனக்கு பொருத்தமான வரன் அமைய வேண்டும் என்று நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். இந்திய கலாச்சாரத்தைப் பொருத்தவரையில், திருமண வரன்களுக்கான எதிர்பார்ப்புகளில் முதன்மையாக இருப்பது ஜாதி மற்றும் மதம் தான். இதற்கு அடுத்ததாகவும் நிறைய நிபந்தனைகள் உண்டு.

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தங்களுக்கு அமையக் கூடிய வரன் என்ன படித்துள்ளனர், வயது என்ன, தோற்றம் எப்படி இருக்கும், உயரம், உடல் எடை என பல விஷயங்களை ஆராய்ந்த பிறகு தான் முடிவு செய்கின்றனர். காலங்கள் மாற, மாற ஒவ்வொரு நபரும் முன்வைக்கும் எதிர்பார்ப்புகள் மற்றும் நிபந்தனைகள் கூடிக் கொண்டே தான் போகிறதே தவிர, அவை குறைந்த மாதிரி தெரியவில்லை.

அதிலும் முன்பெல்லாம் எப்படி வரன் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்த காலம் போய், இப்போதெல்லாம் எப்படிப்பட்ட வரன் வேண்டாம் என்று வெளிப்படையாகவும், ஆணித்தரமாக சொல்லும் அளவுக்கு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக, வரன் கேட்டு செய்தித்தாளில் வெளியிடப்பட்ட விளம்பரம் ஒன்று தற்போது வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.

Read More : செலவைக் குறைப்பதற்காகக் காபி மெஷினில் சிக்கனை சமைத்த நபர்: டெக்சாஸில் சுவாரசியம்!


மும்பையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் சமீர் அரோரோ, இந்த விளம்பரத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த விளம்பரத்தில் 24 வயதான பெண்ணுக்கு மாப்பிள்ளை வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், தங்களுக்கு என்ன மாதிரியான மாப்பிள்ளை வேண்டும், என்ன மாதிரியான மாப்பிள்ளை வேண்டாம் என்பது குறித்து நிபந்தனைகளை தெரிவித்துள்ளனர். அந்த நிபந்தனைகளில் ஒன்றுதான் இப்போது சமூக வலைதளத்தில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

அந்த விளம்பரத்தில், “ஹிந்து சைவப் பிள்ளை பிரிவைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை.  இந்த பெண் மிகவும் அழகாக இருப்பார். பிசினஸ் செய்யும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் போன்ற பணியில் இருப்பவர்கள், முதுநிலை மருத்துவர்கள் அல்லது தொழிலதிபர்கள் போன்ற மாப்பிள்ளை தேவை. அதே சமயம், சாஃப்ட்வேர் பொறியாளர்களாக வேலை செய்பவர்கள் தயவுசெய்து தொடர்புகொள்ள வேண்டாம்’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

 



இதில் சாஃப்ட்வேர் மாப்பிள்ளை வேண்டாம் என்ற நிபந்தனை தான் இந்த விளம்பரம் டிரெண்ட் ஆகுவதற்கு காரணம் ஆகும். இதற்கு ரணீத் என்ற டிவிட்டர் பயனாளர் அளித்துள்ள பதிலில், “துரதிருஷ்டவசமாக அல்லது நல்வாய்ப்பாக இதே சாஃப்ட்வேர் பொறியாளர்கள் தான் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளைக் காட்டிலும் கூடுதலாக சம்பாதிக்கின்றனர். குறிப்பாக, தங்களுடைய பாஸ் மீது அதிருப்தி ஏற்பட்டால் உடனடியாக அவர்கள் தங்களின் வேலையை மாற்றிக் கொள்ள முடியும்’’ என்று கூறியுள்ளார்.

வரன் அமைய இதுபோன்ற விளம்பரங்களை சார்ந்திருக்கும் நிலையில் சாஃப்ட்வேர் பொறியாளர்கள் இல்லை; தனக்கான வரனை தானே அமைத்துக் கொள்ளும் நிலையில் இருக்கின்றனர் என்று மற்றொரு பயனாளர் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விளம்பரம் எப்போது வெளியிடப்பட்டது என்ற விவரம் இல்லை.

 
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: India, Trending, Viral

அடுத்த செய்தி