சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் “என்ன சாதித்தார் பெரியார்?” ஆவணத் தொகுப்பு

  • News18
  • Last Updated: January 24, 2020, 2:33 PM IST
  • Share this:
”என்ன சாதித்தார் பெரியார்?” என்ற பெயரில் நியூஸ் 18 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணத் தொகுப்பு சமூக வலைதளங்களில் அதிகம்பேரால் பகிரப்பட்டு வருகிறது.

தலைமுறை கடந்து இன்றும் இளைஞர்கள் மத்தியில் பெரியார் குறித்த தேடல் அதிகரித்து வருகிறது. அவரைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். சாதி ஒழிப்பு, பெண்ணுரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்த பெரியாரை பின்னொட்டி இன்றும் அவரின் குரலாக தமிழக அரசியல் களம் எதிரொலித்து வருகிறது. அண்மையில் பெரியார் குறித்து ரஜினி பேசிய பிறகு பெரியார் பேசுபொருளாகியுள்ளார்.

குறிப்பாக பெரியார் குறித்த தேடல் இணையத்தில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், என்ன சாதித்தார் பெரியார்? என்ற தலைப்பில் ஆவணத் தொகுப்பு நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. தொடர்ந்து ஃபேஸ்புக்கிலும் , யூடியூபிலும் அந்த வீடியோ தொகுப்பு பதிவேற்றம் செய்யப்பட்டது.


இந்த ஆவணத் தொகுப்பை பேஸ்புக்கில் 10 மணி நேரத்தில் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். தற்போதுவரை, அந்த வீடியோவை,10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பகிர்ந்துள்ளனர்.

இந்த தொகுப்பில் பெரியார் குறித்த பல அரிய தகவல்களை பல்வேறு தரப்பினர் பகிர்ந்துள்ளனர்.

வீடியோவை காண: கிளிக் செய்க
First published: January 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading