விவாதத்தில் எம்.பி... குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்.. நாடாளுமன்றத்தில் சுவாரசியம்

”சபாநாயகரின் நாற்காலி எப்போதும் தலைமை அதிகாரிகளால் மட்டுமே அலங்கரிக்கப்படும். ஆனால் இன்று ஒரு வி.ஐ.பி என்னுடைய நாற்காலியைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.”

news18
Updated: August 22, 2019, 7:41 PM IST
விவாதத்தில் எம்.பி... குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்.. நாடாளுமன்றத்தில் சுவாரசியம்
ட்ரவர் மல்லார்ட்
news18
Updated: August 22, 2019, 7:41 PM IST
நாடாளுமன்றத்தில் பேசிக்கொண்டே பால் தரும் பெண் எம்.பிக்கள் குறித்த புகைப்படங்கள் பல வைரலாகப் பரவியுள்ளன. ஆனால் இந்த புகைப்படம் சற்று அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

நியூசிலாந்து நாடாளுமன்றத்தின் சபாநாயகரான ட்ரவர் மல்லார்ட், எம்.பி. ஒருவரின் குழந்தைக்கு தன் இருக்கையில் வைத்து கொண்டு புட்டி பாலூட்டும் புகைப்படம் சமூக வலைதளங்கில் வைரலாகப் பரவி வருகிறது.

அதாவது நியூசிலாந்தின் எதிர்க் கட்சி எம்.பியான டமாடி கோஃபிக்கு கடந்த ஜூலை மாதம் செயற்கை கரூவூட்டல் முறையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், கடந்த புதன் கிழமை தன் குழந்தை ஸ்மித்துடன் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தார்.
Loading...அப்போது டமாடி, குழந்தை ஸ்மித்தையும் உடன் வைத்துக்கொண்டு அவையில் பேசிக்கொண்டிருந்தார். இதை கவனித்த சபாநாயகரான மல்லார்ட் குழந்தையை வாங்கி தன்னுடைய மடியில் வைத்துக்கொண்டார். குழந்தை அழவே உடனே பாட்டிலிலிருந்த பாலை ஊட்டிவிட்டார்.

அப்போது பேசிய சபாநாயகர் மல்லார்ட், “சபாநாயகரின் நாற்காலி எப்போதும் தலைமை அதிகாரிகளால் மட்டுமே அலங்கரிக்கப்படும். ஆனால் இன்று ஒரு வி.ஐ.பி என்னுடைய நாற்காலியைப் பகிர்ந்துகொண்டுள்ளார் ” என சிரித்துகொண்டே எம்.பி டமாடி கோஃபிக்கும் அவரது மனைவி டிம்மிற்கும் புதிய வரவுக்காக மகிழ்ச்சி என ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

பாலூட்டும் புகைப்படத்தோடு சபாநாயகரின் இந்த பேச்சும் அனைவரால் ரசிக்கப்பட்டு பகிர்ந்து வைரலாகி வருகிறது.

பார்க்க :

எங்க ஊரு மெட்ராசு... இது நம்ம சென்னை...!

First published: August 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...