இரண்டு வருட சாதனைகளை இரண்டே நிமிடத்தில் விளக்கிய நியூசிலாந்து பிரதமர் : ட்ரெண்டாகும் வீடியோ..!

சிறந்த தலைமைக்கு இந்த வீடியோவே சான்று என மக்கள் பாராட்டு..!

இரண்டு வருட சாதனைகளை இரண்டே நிமிடத்தில் விளக்கிய நியூசிலாந்து பிரதமர் : ட்ரெண்டாகும் வீடியோ..!
நியூசிலாந்து பிரதமர்
  • News18
  • Last Updated: November 5, 2019, 7:36 PM IST
  • Share this:
நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டென் சமீபத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில் தன் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு தன் கட்சி இரண்டு வருடங்களாக என்னென்ன சாதனைகளை, திட்டங்களை நிகழ்த்தியது என்பதை இரண்டே நிமிடங்களில் மூச்சுவிடாமல் விவரிக்கிறார்.

39 வயதில் பெண்ணாக நியூசிலாந்தை அவர் ஆளும் அழகை உலகமே அன்னாந்து பார்க்கிறது. கண்டனங்கள் தெரிவிப்பதில் தொடங்கி அரவணைப்பது வரை இவரின் செயல்பாடுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தக்கூடியது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான எந்த செயலையும் ஊக்குவிக்காத தலைவர். இனவெறி, நிறவெறிக்களுக்கு புறம்பானவராக நடந்துகொள்ளும் ஜெசிந்தா அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இனவெறிப் பேச்சுகளுக்கும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்வார்.

அவருடைய அலுவலகத்தில் உடன் இருப்பவர்கள் இரண்டு ஆண்டு சாதனைகளை இரண்டே நிமிடத்தில் சொல்ல வேண்டும் என சவால் கொடுக்கின்றனர். அந்த சவாலை ஏற்று சரளமாக கொஞ்சமும் யோசிக்காமல் அவற்றை புள்ளி விவரப்படி பட்டியலிடுகிறார்.
அப்படி அதில் 92,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கி வேலையில்லா திண்டாட்டத்தை ஒழித்துள்ளோம், நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம், பத்து வருடங்களில் முதல்முறையாக குற்றவாளிகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளோம், போலீஸ் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம், பள்ளிக் கட்டணத்தைக் குறைத்து பெற்றோர்களின் டொனேஷனை தவிர்த்துள்ளோம், பிளாஸ்டிக் ஊக்குவிப்பை தவிர்த்துள்ளோம் என அவர் பட்டியலை தொடர்ந்துகொண்டே செல்கிறார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதில் என்னவொரு ஆச்சரியம் எனில் எந்தவித பேப்பர், ஹிண்டுகளின்றி கேமராவை பார்த்தபடி அப்படியே பட்டியலிடுகிறார்.

Watch Also:

 

First published: November 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்