பந்துவீசுவதில் பும்ராவை நகலெடுத்தச் சிறுவன்! வைரலாகும் வீடியோ

பந்துவீசுவதில் பும்ராவை நகலெடுத்தச் சிறுவன்! வைரலாகும் வீடியோ
நியூசிலாந்து சிறுவன்
  • Share this:
இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவை நகல் எடுத்தது போன்று பந்துவீசும் சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா. எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பணமாக இருந்துவருகிறார். இந்திய அணியின் இடம் பெற்ற வேகப் பந்து வீச்சாளர்களிலேயே பும்ராவுக்கு முக்கியமான இடம் உள்ளது. பந்து வீசுவதற்கு பும்ரா ஓடி வரும் ஸ்டைல் பார்ப்பதற்கு வித்தியாசமாகத் தோன்றும்.

பந்து வீச ஓடும் அவர், நின்று நின்று ஓடுவது போல அவரது ஸ்டைல் இருக்கும். இந்தநிலையில், நியூசிலாந்தைச் சேர்ந்த சிறுவன், அப்படியே பும்ராவை நகலெடுத்தது போல பந்து வீசுகிறான். அந்தச் சிறுவனின் வீடியோவை நியூசிலாந்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் ரீ ட்விட் செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

Also see:

First published: February 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்