ஆடையின்றி வீட்டிற்கே வந்த ஆபாச நட்சத்திரங்கள்...! சிறார் & பெற்றோர்களை எச்சரிக்கும் விளம்பரத்திற்கு குவியும் பாராட்டு

சிறுவர்களுக்கு இணைய பாதுகாப்பை எடுத்துரைக்கும் வகையில் நியூசிலாந்தில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரம் ஒன்று அனைவரது பாராட்டையும் குவித்து வருகிறது.

ஆடையின்றி வீட்டிற்கே வந்த ஆபாச நட்சத்திரங்கள்...! சிறார் & பெற்றோர்களை எச்சரிக்கும் விளம்பரத்திற்கு குவியும் பாராட்டு
விளம்பர காட்சிகள்
  • Share this:
நியூசிலாந்து அரசு வெளியிட்டுள்ள விளம்பரத்தில் 2 ஆபாசப்பட நடிகர்கள் சிறுவனின் தாய் முன் ஆடையின்றி நிற்கின்றனர். லேப்டாப் உடன் வரும் இவர்களை கண்டு அதிர்ச்சியில் செய்வதறியமால் நிற்கிறார்.இந்த விளம்பரம்  சிறார்கள் இணையத்தில் ஆபாசப்படங்கள் பார்ப்பதை தடுப்பதையும், இணையத்தில் தேவையில்லாத ஆபாச விளம்பரங்களை தவிர்ப்பதையும் மையமாக கொண்டுள்ளது. ஆன்லைன் வகுப்பு காரணமாக மாணவர்கள் மொபைல் மற்றும் லேப்டாப்களில் இணையத்தில் மூழ்கி உள்ளனர். அவர்களை பெற்றோர்கள் கவனமாக கையாள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.ஆன்லைன் மூலமாக கல்வி பயிலும் மாணவர்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட இணையத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிறார்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த விளம்பரம் இணையத்தில் 11 மில்லியனுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. ஆபாச நட்சத்திரங்களை வைத்து பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அரசின் விளம்பரத்திற்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
First published: June 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading