Home /News /trend /

இளைஞர்களுக்கு விப்ட் கிரீம் கேன்களை விற்க தடை..! ஏன் தெரியுமா.?

இளைஞர்களுக்கு விப்ட் கிரீம் கேன்களை விற்க தடை..! ஏன் தெரியுமா.?

விப்ட் கிரீம்

விப்ட் கிரீம்

Whipped Cream Can | நியூயார்க் நகரில் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு விப்ட் கிரீம் கேன்களை விற்பனை செய்ய தடை செய்யும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
வெளிநாட்டில் கேக், ப்ரூட் சாலட், பேன் கேக் போன்ற உணவுப் பொருட்களை விப்ட் கிரீம் கொண்டு அலங்கரிப்பது வழக்கம். இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 21 வயதுக்குட்டபவர்களுக்கு விப்ட் கிரீம் கேன்களை விற்பனை செய்யக்கூடாது என்றிருந்த, பழைய சட்டம் தற்போது மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை கன்வீனியன்ஸ் ஸ்டோர், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக உலக நாடுகள் பலவற்றிலும் புகையிலை பொருட்கள், ஆல்கஹால், சிகரெட் போன்றவற்றை குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே விற்க வேண்டும் என்ற நடைமுறை அமலில் இருக்கும். ஆனால் நியூயார்க் நகரில் இப்படியொரு விநோதமான சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு பின்னணயில் ஒரு ஆபத்தான காரணம் மறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. விப்ட் கிரீம் கேன்களில் சிரிப்பூட்டும் வாயு என அழைக்கப்படும் நைட்ரஸ் ஆக்சைடு அடைக்கப்பட்டுள்ளது. இதனை டீன் ஏஜ் பருவத்தினர் போதைப் பொருள் போல் பயன்படுத்தி வருவது தெரியவந்ததை அடுத்து இந்த கடுமையான சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

நியூயார்க்கைப் பொறுத்தவரை தொழில் முறை பயன்பாட்டிற்கான நைட்ரஸ் ஆக்சைடு சட்டப்பூர்வ அங்கீகரிக்கப்பட்ட ரசாயனமாகும். இருப்பினும், விப்ட் கிரீம் கேன்களில் இருந்து வெளியேறும் வாயுவை சுவாசிப்பதன் மூலம் டீன் ஏஜ் பருவத்தினர் உச்சகட்ட கிளர்ச்சி அடைவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாயுவை அதிக அளவில் சுவாசிப்பது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், நியூயார்க்கில் 2021ம் ஆண்டு நிறைவேற்றிய சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.21 வயதிற்குட்பட்டவர்களுக்கு விப்ட் கிரீம் கேன்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு முதல் முறை 250 அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 20 ஆயிரமும், அடுத்தடுத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் ஒவ்வொரு முறையும் 500 அமெரிக்க டாலர்கள், இந்திய ரூபாயின் மதிப்பில் கிட்டதட்ட 40 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : மேக்கப் இல்லாமல் அழகிப் போட்டியில் கலந்து கொண்ட பெண் - என்ன நடந்தது.?

இதுகுறித்து நியூயார்க் மாநில செனட்டர் ஜோசப் அடபோ கூறுகையில் “நியூயார் நகர தெருக்களில் கிடைத்த காலி விப்ட் கிரீம் கேன்கள் மற்றும் அது தொடர்பான புகார்கள் காரணமாகவே அதன் விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஏனெனில் தெருக்களில் குவிந்து கிடக்கும் விப்ட் கிரீம் டப்பாக்கள் இளம் தலைமுறையினர் இடையே நைட்ரஜன் ஆக்சைடு தவறாக பயன்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read : மின்னல் தாக்கி மணமகன் பலி.. "போட்டோ ஷூட்டின்" போது நிகழ்ந்த சோகம்.!

விப்ட் கிரீம் கேனிஸ்டர்களில் உள்ள நைட்ரஸ் ஆக்சைடு பொதுவாக “விப்பட்ஸ்” அல்லது “விப்பிட்ஸ்” என்று அழைக்கப்படும் முறையில் உள்ளிழுக்கும் போது, அது இளம் வயதினருக்கு ஒரு வகையான மயக்கத்தை கொடுக்கிறது. இந்த புதுவிதமான போதைக்கு அடிமையாகும் இளைஞர்களுக்கு மனநலம் சம்பந்தப்பட்ட நோய்கள், நரம்பு மண்டல பாதிப்பு, சுய நினைவிழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் வாயுவை உள்ளிழுக்கும் சமயத்தில் இரத்த அழுத்தம் இழப்பு, மயக்கம், மாரடைப்பு ஆகியவை ஏற்பட்டு இறுதியில் திடீர் மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: NewYork, Trending

அடுத்த செய்தி