முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / சாப்பிடுவதில் இப்படியும் ஒரு உலக சாதனை படைத்த தென்னாப்பிரிக்க பெண்..!

சாப்பிடுவதில் இப்படியும் ஒரு உலக சாதனை படைத்த தென்னாப்பிரிக்க பெண்..!

கின்னஸ் உலக சாதனை

கின்னஸ் உலக சாதனை

சிமானிலே 60 வினாடிகளில் 4.26 அவுன்ஸ்- அதாவது 121 கிராம் கோழி பாத கறியை உட்கொண்டு வெற்றி பெற்றார். இது அவரது போட்டியாளர்களை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும்.

  • Last Updated :
  • international, Indiasouth africasouth africa

உணவு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. பிடித்த உணவை எடுத்து வைத்து  ஆரம்பித்தால் பாத்திரத்தின் அடித்தட்டி விட்டாலும் பசி தீராது. உணவுகளை வைத்து சாதனை என்று எடுத்துக்கொண்டால் ரகம் ரகமாக வந்து ஆச்சரியப்பட வைக்கும். அப்படி ஒரு ஆச்சர்யம் தான் இப்போது நடந்துள்ளது. 

கோழியில் எல்லோருக்கும் பிடித்தது என்றால் லெக் பீஸ் தான். பிரியாணி வாங்கினால் கூட லெக்பீஸ் கேட்டு வாங்கி சாப்பிடுவோம்.  குழம்பிலும் அப்படியே, ஆனால், கோழிகள் பாத விரல்களை நீங்கள் விரும்பி சாப்பிடுவதுண்டா?கோழி பாதம் என்பது ஒரு தனித்துவமான நாட்டுப்புற உணவாகும், இது உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உண்ணப்படுகிறது. கோழிக்கால் உண்பவர்களின் முழுமையான எண்ணிக்கை சாதாரண இறைச்சி உண்பவர்களை விட குறைவு என்றாலும், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பெரும்பாலான நாடுகளில் விருப்பமான உணவாக உள்ளது.

இப்போது, ​​தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கோழி பாத  பிரியர் ஒருவர் 4.26 அவுன்ஸ் கறியை 60 வினாடிகளில் சாப்பிட்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வுயோல்வெத்து சிமானிலே, டர்பனில் உள்ள உம்லாசியில் உள்ள மாஷாம்ப்ளேன்ஸ் லவுஞ்ச் உணவகத்தில் தனது 4 தோழிகளுடன் ஒரு உணவு போட்டியை நடத்தினார்.

பிட் புல் மற்றும் ராட்வீலர் நாய் இனங்களுக்குத் தடை - கான்பூர் மாநகராட்சி அதிரடி உத்தரவு

போட்டி தொடங்குவதற்கு முன், ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் 10 அவுன்ஸ் கோழி பாத கறியை நடுவர் சோபியா கிரீன்கேர் வழங்கினார். ஒரு நேரத்தில் ஒரு கோழி பாத கறியை மட்டுமே சாப்பிட முடியும். ஒன்றுக்கு மேற்பட்டவை சாப்பிட்டால் தகுதியிழப்புக்கு வழிவகுக்கும். பங்கேற்பாளர்கள் குறைந்தபட்சம் 3.8 கிராம் உட்கொள்ள வேண்டும், இது சாதனைக்கு தகுதியானதாகக் கருதப்பட்டது.

போட்டி தொடங்கியதும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உத்தியை செயல்படுத்தினர். சிலர் நேரம் தொடங்கியதும் வாய் முழுக்க அடைத்துக்கொண்டு விழுங்க போராடிக்கொண்டு இருந்தனர். ஆனால் சிமானிலே பொறுமையாக சீரான வேகத்தில் கோழி பாதங்களை உண்டார்.

அதில் சிமானிலே 60 வினாடிகளில் 4.26 அவுன்ஸ்- அதாவது 121 கிராம் கோழி கால் விரல்கள் கறியை உட்கொண்டு வெற்றி பெற்றார். இது அவரது போட்டியாளர்களை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும்.

அந்த போட்டியில் வென்றதோடு ஒரு புதிய உலக சாதனையையும்  படைத்துள்ளார் . ‘இந்த பட்டத்தை பெற்ற முதல் நபர் சிமானிலே’ என்று கின்னஸ் உலக சாதனை நிறுவனம் தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்தது.

First published:

Tags: Chicken, Guinness, World record