நம் சிறு வயதில் ஏராளமான முறை பேப்பர் ராக்கெட்டுகளை தயாரித்து பறக்க விட்டிருப்போம். பள்ளி நாட்களில் பேப்பர் ராக்கெட்டுகளை பறக்க விட்ட அனுபவத்தை நம்மால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. நாம் தயாரித்த பேப்பர் ராக்கெட்டுகள் எவ்வளவு உயரம் மற்றும் தூரம் பறந்து செல்லும் என்பதை காட்ட நண்பர்களுடன் போட்டி போட்டு மகிழ்ந்திருப்போம்.
இப்படிப்பட்ட பேப்பர் ராக்கெட்டுகளுடன் விளையாடுவதால் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கலாம் என்பது நம்மில் பலருக்கு தெரியாது இல்லையா.!! தென் கொரிய இளைஞர்கள் தயாரித்த பேப்பர் ராக்கெட் நம்பமுடியாத தூரம் பறந்து சென்று புதிய உலக சாதனை படைத்து உள்ளது. இதன் மூலம் ஏற்கனவே படிக்கப்பட சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது. இந்த சாதனை செய்தியை Guinness World Records அமைப்பு தனது அதிகாரப்பூர்வ சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்து இருக்கிறது.
தென் கொரியாவில் வசிக்கும் கிம் கியூ டே (Kim Kyu Tae) பேப்பர் பிளேன் ராக்கெட்டை ஏவுவதில் வல்லவர். சமீபத்தில் Guinness World Records அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள் உள்விளையாட்டு அரங்கம் ஒன்றில் பேப்பர் ராக்கெட் ஏவும் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த போட்டியில் பங்கேற்ற கிம் கியூ டே, ஏற்கனவே படைக்கப்பட்ட உலக சாதனையை முறியடிக்கும் தூரத்திற்கு தனது பேப்பர் ராக்கெட்டை விட்டெறிவதன் மூலம் ஏவினார். இவர் ஏவிய பேப்பர் ராக்கெட் பறந்து சென்று பயணித்த தூரம் சுமார் 77.134 மீட்டர் தொலைவு ஆகும். அதாவது 252 அடி 7 அங்குலம் இவர் ஏவிய பேப்பர் ராக்கெட் பறந்து சென்று உலக சாதனை படைத்து உள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 2012-ல் ஜோ அயூப் மற்றும் பேப்பர் ராக்கெட் டிசைனர் ஜான் எம். காலின்ஸ் ஆகியோர் 69.14 மீட்டர் அதாவது 226 அடி 10 அங்குலம் தூரம் தங்கள் பேப்பர் ராக்கெட்டை பறக்க வைத்ததே உலக சாதனையாக இருந்தது. இந்த சாதனை 10 ஆண்டுகள் கழித்து தற்போது முறியடிக்கப்பட்டு உள்ளது. தனது நண்பர்கள் ஷின் மூ ஜூன் மற்றும் சீ யீ ஜியான் ஆகியோரின் ஆதரவு மற்றும் உதவியுடன் இந்த உலக சாதனையை செய்ய முடிந்ததாக கிம் கியூ டே குறிப்பிட்டு உள்ளார். இதில் பேப்பர் ராக்கெட்டை ஏவியவர் கிம் கியூ டே என்றாலும் அதை டிசைன் செய்தவர் சீ யீ ஜியான் (Chee Yie Jian), சக்திவாய்ந்த ராக்கெட்டை மிக சரியாக மடித்தவர் ஷின் மூ ஜூன் ஆவர்.
இதில் மற்றொரு வியக்க வைக்கும் விஷயம் என்னவென்றால் Chee Yie Jian மலேசியாவை சேர்ந்தவர். இவர் ஷின் அல்லது கிம்மை இதுவரை நேரில் சந்தித்தது இல்லை. சோஹியால் மீடியாவில் மட்டுமே தென்கொரியாவை சேந்த இந்த இருவரிடமும் பழகி உள்ளார். பொடியை பற்றிய தகவலை அவரிடம் பகிர்ந்து கொண்ட போது உலக சாதனை படைத்த ராக்கெட்டை டிசைன் செய்ய மலேசியாவிலிருந்தே உதவி உள்ளார்.
Published by:Lilly Mary Kamala
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.