ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இந்த புகைப்படத்தை ஒரு நிமிடம் உற்று பார்க்க முடிந்தால் நீங்கள் தான் ரியல் ஜீனியஸ்

இந்த புகைப்படத்தை ஒரு நிமிடம் உற்று பார்க்க முடிந்தால் நீங்கள் தான் ரியல் ஜீனியஸ்

ஆப்டிகல் புகைப்படம்

ஆப்டிகல் புகைப்படம்

Optical Illusion | படத்தின் மையத்தில் உள்ள சற்றே பெரிய கரும்புள்ளி, கருந்துளையை போல, இயக்க உணர்வை ஏற்படுத்துகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

சமீப நாட்களாக சோஷியல் மீடியாக்களில் பல விதமான ஆப்டிகல் இல்யூஷன்கள் தொடர்ந்து வைரலாகி வருகின்றன. மூளையை குழப்பி, கண்களை ஏமாற்றும் ஆப்டிகல் இல்யூஷன்கள் நெட்டிசன்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுவருகின்றன. அபப்டிப்பட்ட ஆப்டிகல் இல்யூஷன் ஒன்றை தான் இங்கே நாம் பார்க்க இருக்கிறோம்.

இந்த புதிய ஆப்டிகல் இல்யூஷன் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. படத்தை பாருங்கள், மையத்தில் ஒரு கரும் புள்ளியை காட்டும் ஒரு நிலையான இமேஜ் தான். ஆனால் இதனை நன்றாக கொஞ்சம் உற்று பாருங்கள். படத்தின் மையத்தில் உள்ள சற்றே பெரிய கரும்புள்ளி, கருந்துளையை போல, இயக்க உணர்வை ஏற்படுத்துகிறது. பார்க்க பார்க்க அந்த கரும்புள்ளியானது இமேஜ் முழுவது விரிவடைவது போன்ற ஒரு உணர்வை பார்ப்பவர்களின் கண்களுக்கு ஏற்படுத்துகிறது.

ஆனால் இந்த இமேஜில் உள்ள கரும்புள்ளி பெரிதாகவில்லை. அபப்டியே தான் இருக்கிறது. உற்று பார்த்தால் கரும்புள்ளி விரிவடையும் நேரத்தில் பார்வையை அதிலிருந்து விலக்கி விட்டு மீண்டும் பாருங்கள், அந்த இமேஜின் நடுவில் உள்ள கரும்புள்ளி மேம்படும் பழைய சைசுக்கே வந்திருக்கும். இப்போது உற்று பார்த்தால் மீண்டும் அப்புள்ளி பிளாக் ஹோலை போல் விரிவடையும். இருப்பினும்இந்த விளைவு எல்லாமே ஒரு ஆப்டிகல் இல்யூஷன் தான். பல அறிக்கைகள் இதை "எக்ஸ்பேண்டிங் ஹோல்" இல்யூஷன் என்று குறிப்பிட்டுள்ளன. இந்த டைனமிக் இல்யூஷன் வெள்ளை பின்னணியில் கருப்பு புள்ளிகளைக் கொண்டுள்ளது. அவை சிறிய நீள்வட்ட பந்துகள் (elliptical balls) போன்றவை. இந்த இமேஜின் மையத்தில் அவுட்லைன் இல்லாத ஒரு கருப்பு கலர் பேட்ச்சானது, ஒரு துளை போல் தெரிகிறது. மேலும் நீங்கள் அதை கண்களால் உற்று பார்க்கும் போது அந்த கருப்பு பேட்ச் விரிவடைந்து கொண்டே இருக்கிறது.

Also Read : கல்யாணத்த நிறுத்துங்க... க மணப்பெண் சொன்ன அதிர்ச்சி காரணம்

இந்த ஆப்டிகல் இல்யூஷன் இமேஜின் நடுவில் உள்ள கருந்துளை நாம் பார்க்கும் வரை விரிவடைந்து கொண்டே இருப்பது தெளிவாக தெரிந்தாலும், இதை பார்த்த சுமார் 20% பேர் இதை உணரவில்லை என்று அறிக்கைகள் கூறுகின்றன. இந்த வேறுபாடு, இந்த மாயை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய சரியான புரிதல் பற்றி கவனம் செலுத்துகிறது.

இல்யூஷனில் என்ன பார்க்கிறார்கள்.?

முன்பு சொன்னபடி இமேஜை உற்று பார்க்கும் போது கரும்புள்ளி விரிவடைகிறது. இந்த புள்ளி வெள்ளை பின்னணியில் தொடர்ந்து பரவி கருப்பு நீள்வட்ட பந்துகளை அதில் மூழ்கடிக்கிறது. எனினும் இதை ஆப்டிகல் இல்யூஷன் என்பதை உணராதவர்கள் இமேஜிற்கு நடுவே ஒரு கருப்பு மை இருக்கிறது என்று நினைத்து பார்க்கிறார்கள்.

ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன.?

கண் பாவை விட்டத்தில் (pupil diameter) அதிக மாற்றங்கள் உள்ளவர்கள் இந்த இல்யூஷன் ஆப்டிகலை சரியாக உணர்ந்தனர். ஆனால் கண் பாவை விட்டத்தில் எந்த மாற்றத்தையும் உணராதவர்கள் தான் அதை ஒரு கருப்பு மையை போல பார்க்கிறார்கள். கண் பாவை விரிவடைவது அல்லது சுருங்குவது என்பது நமது சுற்றுப்புறங்களால் மட்டும் வழிநடத்தப்படுவதில்லை. நமது சொந்த கற்பனை மற்றும் உணர்வின் மூலம் இயக்கப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

First published:

Tags: Optical Illusion