முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் புதிதாக தொடங்க இருக்கும் மகாபாரத சீரிஸ் பற்றிய அறிவிப்பு வெளியானது !

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் புதிதாக தொடங்க இருக்கும் மகாபாரத சீரிஸ் பற்றிய அறிவிப்பு வெளியானது !

மகாபாரதம்

மகாபாரதம்

ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் மகாபாரதத்தை ஏதோ ஒரு வடிவத்தில் அறிந்திருக்கிறார்கள். பெரும்பாலும் குழந்தைகள் தங்கள் தாத்தா பாட்டிகளிடம் இருந்து கதைகளாகக் கேட்டிருக்கிறார்கள்.

  • Last Updated :
  • chennai |

கடந்த வாரம் அமெரிக்காவில் நடந்த D23 எக்ஸ்போவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தான் விரைவில் தொடங்க இருக்கும் சில முக்கிய இந்திய நிகழ்ச்சிகளை பற்றி அறிவித்தது. இதில் , இந்தியாவின் பழங்கால இதிகாசமான மகாபாரதத்தின் புதிய தொடர் , காஃபி வித் கரண் சீசன் 8 மற்றும் ஷோடைம் என்ற புதிய தொடர்களும் அடங்கும்

மகாபாரதத்தை மது மண்டேனா, மைதோவர்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் அல்லு என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன. பழங்கால இந்தியாவில் குருக்ஷேத்திரத்தில் கௌரவர்களும் பாண்டவர்களும் போரிடும்போது சரிக்கும் தவறுக்கும் இடையிலான மோதலைப் பற்றி இந்திய புராணக் காவியமான மஹாரபாரதம் பேசுகிறது.

இந்தியாவின் அடையாளமாக கருதப்படும் காவியங்களில் ஒன்று மகாபாரதம். அதை சீரிஸ் வடிவில் காட்சிப்படுத்தி வெளியிட பிரபல ஓடிடி தளமான டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனம் தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் எச்எஸ்எம் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்கின் உள்ளடக்கத் தலைவர் கௌரவ் பானர்ஜி, டிஸ்னி ஸ்டார் எக்ஸ்போவின் சர்வதேச உள்ளடக்கம் மற்றும் செயல்பாடுகள் பற்றிய அமர்வில் "ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் மகாபாரதத்தை ஏதோ ஒரு வடிவத்தில் அறிந்திருக்கிறார்கள். பெரும்பாலும் குழந்தைகள் தங்கள் தாத்தா பாட்டிகளிடம் இருந்து கதைகளாகக் கேட்டிருக்கிறார்கள்.

ஆனால் இன்னும் பில்லியன் கணக்கானவர்களுக்கு இந்த கதையை பற்றி தெரியவில்லை. அதனால் இந்த கதையை எளிமையாக எல்லோரையும் சென்று சேரும்படி அடுத்த ஆண்டு பரந்த உலகளாவிய பார்வையாளர்களுக்குக் கொண்டுவருவது உண்மையில் ஒரு பாக்கியமாக இருக்கும்." என்று அவர் கூறினார்,

தயாரிப்பாளர் மது மந்தேனா ஒரு அறிக்கையில், "மனிதகுலம் அனுபவிக்கும் ஒவ்வொரு உணர்வுபூர்வமான மோதல்களும் மகாபாரதத்தில் ஏதோ ஒரு கதாபாத்திரம் மற்றும் கதைக்களங்கள் மூலம் வடிவம் பெறுகின்றன என்று கூறப்படுகிறது. அதற்கான தீர்வுகளையும் வழங்குகிறது.

எலும்பை உறையச் செய்யும் பால்டிக் கடல் பனிக்கட்டியின் மீது ஓவியம்.. வியக்க வைக்கும் அமெரிக்க ஓவியர்!

இப்படியான ஒரு படைப்பை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மூலம் உலகிற்கு தரும் வாய்ப்பை வழங்கியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்று டி23 எக்ஸ்போவில் மதிப்புமிக்க உலகளாவிய மேடையில் அறிவித்தது."

மகாபாரத நாடகம் உருவாக்குவது முதல் முறை அல்ல. மகாபாரத காவியம் பலமுறை திரையில் ஒளிபரப்பாகியுள்ளது. பிஆர் சோப்ரா 1988 இல் தொலைக்காட்சிக்காக இந்த காவியத்தை ஒட்டிய நாடகத்தை உருவாக்கினார். இது தூர்தர்ஷனில் பெரும் வெற்றி பெற்றது. சித்தார்த் குமார் திவாரி 2013 இல் ஸ்டார் நெட்ஒர்க் தொலைக்காட்சிக்காக ஒரு தொடரை உருவாக்கினார். இது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரிலும் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

புது தொடருக்கான கிராபிக்ஸ் கான்சப்ட் ஓவியங்களையும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பாகுபலி அளவிற்கு பிரமாண்ட காட்சியமைப்புகளோடு அந்த படங்கள் காட்சி அளிக்கின்றன.

First published:

Tags: Disney, Hotstar, TV series